பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொண்டரடிப் பொடிகள்' அன்புமிக்க சங்கச் சான்றோர்களே, தமிழார்வம் கொண்டு வந்திருக்கும் ஊர்ப் பெருமக்களே, வணக்கம். கரும்பு தின்னக் கூவி கொடுப்பது போல் பல்கலைக்கழக மானியக்குழு ஏற்படுத்தியுள்ள திட்டத்தின் கீழ் இச்சொற்பொழிவு நடைபெறுகின்றது. இத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பிழைப்பின் நிமித்தம் நம் சொந்தவூரையும் தமிழகத்தையும் துறந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு சிதறிக்கிடக்கும் நாம் ஒன்று கூடுகின்றோம். கூடும்போது காலத்தைப் பயனுள்ள முறையில் செலவழிக்கின்றோம், கலந்து பழகும் வாய்ப் பினைத் தவிர நம் அனைவருக்கும் பரம்பரைச் சொத் தாகிய தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பற்றிக் சிந்திக்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளு கின்றோம். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் பக்தி இலக்கியப் பகுதி மிகப் பேரளவில் விரிந்து கிடக்கின்றது. சைவ இலக்கியப் பகுதியில் திருமுறை இலக்கியம் செல்வாக்கு மிக்கது; படிக்கப் படிக்க இலக்கியச் சுவையை வளர்ப்பதுடன்

  • திருவேங்கடவன் பல்கலைக்கழக விரிவுச் சொற் பொழிவுத் திட்டத்தில் 31-1.68 அன்று குண்டக்கல் தமிழிசிை சங்கத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.