பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

ஆழ்வார்களின் ஆரா அமுது


பேரின்பம் பெறும் மறுமையுலகத்திற்கும் வழிகாட்டுவது. இங்கணமே வைணவ சமய இலக்கியப் பகுதியில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழகத்தில் வைணவப் பெரு மக்களால் பெரிதும் போற்றப்பெறும் சிறந்த பக்தி நூலாகத் திகழ்கின்றது. ஆனால் சைவ இலக்கியம் மக்க ளிடையே பரவியிருப்பது போல் வைணவ இலக்கியம் அதிக மாகப் பரவவில்லை என்பதைக் காணும்போது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது. நானும் வித்துவான், எம். ஏ. பட்டங்கள் பெற்றபின் என் இலக்கிய அறிவை நினைவு கரும்போது வைணவ இலக்கியம் பற்றிய அறிவு மிகச் சிறிய அளவில்தான் இருந்ததைக் கண்டேன். ஆழ்வார்கள் பன்னிருவர் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேனே அன்றி அவர்கள் நமக்கு நல்கியுள்ள அருளிச் செயல்களைப் பற்றிச் சிறிதும் அறிந்து கொள்ளாத நிலையில் இருந்தேன். இந்தக் குறையைப் போக்குவதற்காக எம்பெருமான் ஏழுமலையான் ஒரு யுக்தியைக் கையாண்டு என்னை இந்த இலக்கியத்தில் ஈடுபடச் செய்தான், அவன் கையாண்ட உக்திதான் என்ன? பல்கலைக் கழகத்தில் எப்படியாவது புகுத்து கொண்டு_ஆராய்ச்சி இது வேண்டும் என்ற விருப்பத்தைத் தந்தானே யன்றி. அங்குப் பணிகிடைக்காத நிலையையும் உண்டாக்கினான். துறையூரில் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியனாகப் ன்ெதறியபொழுது தமிழை ஆழ்ந்து கற்க வாய்ப்பு களை நல்கினான். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வித்துவான், எம். ஏ. பட்டங்களைப் பெற்றேன். பெற்ற பிறகு வாழ்க்கையில் பல சிக்கல்களைத் தோற்று வித்தான்; சிந்தனையையும் மயங்க ஆத்தான். இஃது ஒரு பெரியகதை. இதைப் பன்னியுரைக்கில் பாரதமாக விரியும். என் வாழ்க்கையில் நேரிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து கினைவுக் குமிழிகள் என்ற தலைப்பில் ஐந்து பகுதிகளாக வெளியிடுகிறேன்: அவற்றில் தெரிந்து கொள்ள லாம்.