பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 ஆழ்வார்களின் ஆரா அமுது வண்ணமாதல்’ என்ற தத்துவம் உண்டு. அதன்படி சைவனாகப் பிறந்தவன் வைணவனானேன்; ஏழுமலையான் என்னை உள்ளத்தால் வைணவனாக்கி விட்டான். ஆகவே காலாயிரத் திவ்வியப் பிரபந்தம்-கம்மாழ்வார் தத்துவம்' என்ற தலைப்பை என் ஆய்வுப் பொருளாகத் தேர்ந் தெடுத்துக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆழ்வார் களின் அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டு வரு கின்றேன். இந்த நிலையில்தான் பன்னிரு ஆழ்வார் களில் ஒருவராகிய தொண்டரடிப் பொடிகள் பற்றி உங்கள் முன் பேச நிற்கின்றேன். தொண்டரடிப் பொடிகள் : இவர் திருமாலை (45 பாசு சங்கள்), திருப்பள்ளி எழுச்சி (10 பாசுரங்கள்) என்ற இரண்டு பிரபந்தங்களை அருளியவர். இவை நாலா பிரத் திவ்வியப்பிரபந்தத்தில் - முதலாயிரத்தில் திரு. மழிசைபிரானின் திருச்சந்த விருத்தத்தை அடுத்து வைக்கப் பெற்றுள்ளன. நாலாயிரத்தைத் தொகுத்து அடைவு படுத்திய நாதமுனிகளின் ஏற்பாடு இது. நாலா யிரத்தில் 24 பிரபந்தங்கள் உள்ளன. இதில் 23 பிரபந்தங்கள் 12 ஆழ்வார்கள் அருளிச் செய்தவை. இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்தமுதனார் அருளிய இராமாநுக நூற்றக்தாதி என்ற பிரபந்தம், மதுர கவிகளால் நம்மாழ்வார் பற்றிப் பாடம் பெற்ற கண்ணிநுளர் சிறுத் தாம்பு இடம் பெற்றது போல், இஃது நாலாயிரத் தொகுப்பில் இடம் பெற்றது. மதுர கவிகளின் பிரபந்தம் முதலாயிரத்தில் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தை அடுத்து இறுதிப் பிரபந்தமாக இடம் பெற்றுள்ளது. :இராமாதுச நூற்றந்தாதி" இயற்பாத் தொகுதியில் திருமங்கையாழ்வாரின் மூன்று பிரபந்தங் களை அடுத்து இறுதிப் பிரபந்தமாக இடம் பெற்றுள்ளது. இத்துடன் இதை விட்டு தொண்டரடிப்பொடிகள் பற்றிச் சிந்திப்போம்.