பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

ஆழ்வார்களின் ஆரா அமுது


உருகாதே கல்லாயிருப்பதற்கு ஒரு வழி சொல்லமாட்டீர் களோ?’ என்கின்றார். இப்படியெல்லாம் சிந்தித்து இப் பாசுரத்தை அதுபவித்து மகிழவேண்டும். இங்ஙனம் தம்மைச் சேவித்த ஆழ்வாரை, நம் பெருமாள் தம் வடிவழகினால் தம் பக்கல் மிக்க பக்தியுடைய வராகும்படிச் செய்தருளுகின்றார். ஆழ்வாரும் வேறு திவ்விய தேசப் பயணத்தை மேற்கொள்ளாமல் திருவரங்கத் திலேயே 岛向剑 விடுகின்றார். பெரியபெருமாளுக்கு ஏதாவது ஒரு கைங்கரியம் செய்து தம் வாணாளைப் பயனுள்ளதாகக் கழிக்க விரும்புகின்றார். பெரியாழ்வார் சிரீவில்லிபுத்துார் ஆலிலைப் பள்ளியானுக்கு மலர்த் தொண்டு செய்து வந்ததைப் போல்வே தாமும் அரங்கநகர் அப்பனுக்கு பல்வகை மலர்கள், திருத்துழாய் சமர்ப்பிப் பதையே ஏற்ற கைங்கரியமாகக் கடைப்பிடிக்கின்றார், சிறந்ததொரு நந்தவனத்தை அமைத்து, காலந்தோறும் பலவகைப் பூமாலைகளையும் திருத்துழாய் நன்மாலை களையும் கட்டிப் பெருமாளுக்குச் சாத்தியும் தமது மாணி நிலைக்கேற்ப அந்தணர் திருமாளிகையில் அன்னபிட்சை வாங்கி அமுது செய்தும் காலம் கழித்துவருகின்றார். தேவதேவியின் வருகை: இங்ங்ணம் இவர் திருவரங்க நாதனுக்குத் திருத்தொண்டு புரிந்து வருகையில் திருவரங். கத்திற்குச் சற்று வடக்கில் இருப்பூர்தி வழியையொட்டி இருக்கும் உத்தமர் கோயில் என்ற திருத்தலத்தில் தேவதேவி என்ற விலைமாது பிறந்து வளர்ந்து வருகின்றாள். இவள் தேவ மாதர் அம்சமாய்ப் பிறந்தவளாதலால் பேரழகுடன் திகழ்கின்றாள். ஒருநாள் இவள் தன் தோழிமாரோடும் தமக்கையோடும் உறையூருக்குப் போந்து சோழ அரசனது 4. இது இப்பொழுது இருப்பூர்தி நிலையம். இருப் பூர்தி வழியை திருச்சி.சேலம் பேருந்து வழி வெட்டிச் செல்லுகின்றது. உத்தமர் கோயில் (கரம்பனூர்) 108 திவ்விய தேசங்களில் ஒன்று.