பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 203 முன்னிலையில் ஆடல் பாடல்களை நிகரின்றி நிகழ்த்தி அரசனை மயக்கி அளவிறந்த செல்வத்தை அவனிடம் பெற்று மிக்க கர்வத்துடன் திரும்புகின்றாள். இங்ங்ணம் மீண்டு வருகையில் திருவரங்கத்தை அடைகின்றாள். இளைப்பாறுதற் பொருட்டு ஆழ்வாரின் தந்தவனத்தில் ஒரு புறத்தில் ஒரு மரத்தினடியில் தங்குகின்றாள். இந்த அழகிய நந்தவனத்தின் நாற்புறங்களையும் உற்றுநோக்கி அம்மலர்ச்சோலையை தன்னுடையதுபோல் பாவித்துக் கொண்டு அதில் பூக்கொய்தும் புனல் விளையாடியும் பொழுது போக்க விரும்புகின்றாள்.இந்தப் பூம்பொழிலுக்கு உரியவரைக் கண்டு தன் வசப்படுத்திக்கொள்ள நினைக் கின்றாள். இந்த எண்ணத்துடன் அந்த நந்தவனத்தைச் சுற்றித்தம் தோழிமாருடன் உலா வருகின்றாள். இந்நிலையில் இந்த நந்தவனத்திற்குரிய விப்ர நாராயணர் பளபளவென்று ஒளிரும் திருப்பரிவட்டத்தைச் சாத்திய நிலையிலும் பன்னிரண்டு திருமண் காப்புகள் தம் திருமேனியில் திகழும் பொலிவுடனும் தாமரை மணிமாலை துளசிமணி மாலைகள் தம் திருக்கழுத்தை அலங்கரிக்கவும் பூஞ்செடிகளுக்குப் பாத்தி கட்டியும் தண்ணீர் பாய்ச்சியும் நந்தவனத் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்ணுறு கின்றாள். உடனே அவள், அவர் அருகில் வந்து முன்னின்று அவரைத் தொழுது வணங்குகின்றாள். தனது உடலழ கையும் உறுப்பு நலன்களையும் காட்டிச் சில காமத்தை எழுப்பும் சேட்டைகளைச் செய்கின்றாள். விஷயாந்தரங் களில் குருடராகிய, அவளை கண்ணெடுத்தும் பாராது" அவளைத் தவிர்த்துத் தம் கைங்கரியத்தில் கருத்துான்றி இருக்கின்றார். இதைக் கண்ட தேவதேவி வியப்பெய்து கின்றாள். தன் தமக்கையிடம், அரசர் முதலிய பலரையும் எளிதில் வசப்படுத்துகின்ற அழகிற் சிறந்த யான், யான் சென்று எதிர்நிற்கவும் பாராமுகமாக இருக்கின்ற இவன் பித்தனோ? பேடனோ?” என்று கூறுகின்றாள். இதனைக் கேட்ட அவள் தமக்கை :பித்தனுமல்லன், பேடனும்