பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


205 ஆழ்வார்களின் ஆரா அமுது என்பதை அந்தணர் உணராதது விசனிக்கத் தக்கது. இறைவன் திருவருள்தான் இங்ங்ணம் நடைபெறச் செய்தது போலும்! அந்தணரால் இவள் பிரிவை ஆற்றியிருக்க முடியவில்லை. அவள் வீட்டைச் சுற்றி வட்டமிடுகின்றார்; திண்ணையில் தயங்கித் தயங்கி நிற்கின்றார். பேரின்பத்தை தாடி நின்ற பெருமகனாரின் மனம் சிற்றின்பத்தை நாடி திற்கும் - ஓங்கி நிற்கும் - நிலையைக் கண்டு யார்தான் நகைக்காமல் இருக்க முடியும்? பொது மக்கள் ஏளனத்திற் குரியவராகின்றார். தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை" என்ற வள்ளுவர் வாய்மொழியும் நம் நினைவிற்கு வருகின்றது. அந்தக் காலத்தில் விப்ரநாராயணரின் நிலை பொது மக்கள் மதிப்பீட்டில் இப்படித்தான் ஆயிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. கம்பெருமாளின் கருணை: விப்ரநாராயணரின் செயல் களை அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கநாதன் கவனித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். இந்நிலையில் யாவர்க்கும் தாயாகிய பெரிய பிராட்டியார் பெருமாளை நோக்கி கநாதா, நமக்குப் பலகாலமாகப் பணிசெய்து வந்த விப்ரநாராயணன் அதனை முழுதும் ஒழித்து விட்டு ஒரு விலைமாதிற்குத் தொண்டு பூண்டான். இப்போது அவள் புறக்கணிக்கவும் மனம் திரும்பாது அவள் புறக்கடை பற்றி ஏங்கி நிற்கின்றானே. இப்படி அவன்னத் தேவரீரின் மாயைக்கு இலக்காக்கலாமோ? இதுவும் உங்கட்கு ஒரு திருவிளையாட்டுப் போலும்! இனி அவனை விரைவில் மீட்டு முன்போல் ஆட்கொண்டு தங்களது அந்தரங்க பக்தனாக்கியருள வேண்டும்' என்று வேண்டுகின்றாள். சேதநனை அருளாலும் ஈசுவரனை அழகாலும் திருத்து பவள். அல்லவா பெரிய பிராட்டியார்? 7. குறள் . 964 (மானம்) 8. பூர்வசன பூஷணம் - 14.