பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii அடியார்களின் நலன்களை வினவத் துடித்துக் கொண்டிருக்கும் திருவாயின் அழகிற்குத் தப்ப முடியாது. ஐயோ!' என்பதற்கு பண்டே பறி கொடுத்த என்னை அநியாயம் செய்வதே என்று கூப்பிடுகின்றார் ஆழ்வார்" (பக். 70), (3) ஞாலம் ஏழும் உண்டான்' என்று சொல்வதைவிட வெண் ணெய் உண்ட வாயன், என் உள்ளம் கவர்ந்தான் . என்று கூறுவதில் இந்த ஆழ்வாருக்கு (திருப். பாணாழ்வார்) முற்றிலும் மனநிறைவு (பக். 74) , {5} மல்லர்களோடு போர் செய்யக் கற்றாயேயன்றி என்னோடு சிருங்கார ரஸ்ாதுபவம் பண்ணக் கற்றிலை காண்!" என்ற வசை தோன்ற மற்பொரு தோளுடை வாசுதேவா என்று விளிக்கின்றாள் (பக். 236). இதில் குலசேகராழ்வார் நாயகியின் உள்ளம் பளிச்சிடு கின்றது. உ. கடை : எழுத்தாளரது உள்ளத்துக் கிளர்ந்: தெழும் உணர்ச்சிச் சரக்கு, நூலைக் கற்டோரது உள்ளத் திற்குச் சென்று சேரும் வண்ணம் அதனை ஏற்றிச் செல்லும் வாகனமாக அமைவது நல்ல நடை அழகு. பாசுரங்களின் நயங்களைப் படிப்பவருக்குப் பயனுடையதாக்கும்போது தான் நடை அழகு பெறுகின்றது. இத்தகைய உரைநடை அழகினை இந்நூலுள் கண்டு மகிழலாம், சில எடுத்துக் காட்டுகள் : (1) கீதமே ஓர் உருவம் கொண்டு சிந்திப்பதும், திகைப்பதும், தெளிவதும், கை கூப்புவதுமாக இருக் கின்றதோ?’ என்று மயங்குகின்றார் மாமுனிவர் (பக். 57). (2) ஓதி ஒதி, உணர்ந்து உணர்ந்து, இன்புற்று அநுபவித்தால் ஒவ்வொரு சொல்லும் ஒரு படித் தேனாக இனிக்கும் (பக். 70), (3) புராணக் கதைகள் புதை பொருளோடு கூடியவை (பக். 128). (4) முதலாழ்வார்கள் மூவரையும் ஒரு மாபெரும்