பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்று உள்ளம் உருகித் தாம் செய்த குற்றங்களை மறந்து மன்னித்தருளுமாறு வேண்டுகின்றார். பிறகு தன்னை மன்னித்து ஆட்கொண்ட அருட்செயலை நினைந்து, சூதனாய்க் கள்வ னாகித் துர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்து வேனைப் யோதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து, தன்யால் ஆதரம் பெருக வைத்த அழகன்ஊர் அரங்கம் அன்றே" [கள்வன் - திருடன்; து ர் த் த ன் - காமலோலன்; போதர் . அடா! இங்கே வா. புந்தி , மனம்; ஆதரம் - அன்பு) என்று பாடி உள்ளம் உருகுகின்றார். தாம் மேற்கொண்ட தீய வழிகட்குக் கழுவாய் செய்து கொள்ள முயன்று பெரியோர்களைச் சார்ந்து தாம் செய்த குற்றங்களையெலாம் ஒன்று விடாமல் எடுத்துக் சொல்லி இவற்றிற்குக் கழுவாய் இன்னதென்று துணிந்து கூறியருளுமாறு வேண்டுகின்றார். அவர்களும் பல நீதி நூல்கள், அற நூல்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து, :பாகவதர்களின் பூரீபாது தீர்த்தத்தை உட்கொள்வதே எல்லாப் பாவங்களும் பரிகாரம் ஆவதற்கு ஏற்ற கழு வாயாகும்' என்று உய்வதற்கு வழிகாட்டுகின்றனர். அங்ங்ணமே விப்ரநாராயணரும் அதனைப் பெற்றுப் பருகித் துரய்மையானவராகின்றார். தொண்டரடிப் பொடிகள் : பின்னர் விப்ரநாராயணர் தம் எஞ்சிய வாழ்க்கையைப் பகவான் பெருமையைப் பாடு வதிலும் மலர்த் தொண்டிலும் தம்மை உட்படுத்திக் 10. திரு மாலை . 16