பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 211 கொள்ளுகின்றார்; பாகவர்கட்குப் பணி செய்வதையும் கடமையாகக் கொள்ளுகின்றார். குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த, ஆடிப்பாடி அரங்க! ஒ என்று அழைக்கும் தொண்ட ரடிப்பொடி ஆ.காம் பெறில் கங்கைகீர் குடைந்து ஆடும் வேட்கைனன் னாவதே' என்று பாசுரத்தை நினைத்து பார்க்கின்றார். பாகவதர் தொண்டே பகவான் தொண்டைவிட மேலானது என்ற உண்மையை அறிகின்றார். ஓ! அரங்கனே! என்று கூப்பிடுகின்ற கைங்கரியத்தையே வழிபாடாகக் கொண்ட பாகவதர்களின் திருவடித் தூள்களில் நாம் குடைந்தாடப் பெற்றால், கங்கைநீரில் குடைந்தாட வேண்டும் வேட்கை ஏதுக்கு? - என்ற சேரவேந்தனின் பொன்மொழிகளை மறை வாக்கியமாகக் கொண்டு ஒழுகுகின்றார். இங்ங்ணம் வைணவர்களின் பாத துரளியாய், அவர்கட்குக் கீழ்படிந்து ஒழுகி வந்ததால் தொண்டரடிப் பொடிகள் என்று சிறப்புத் திருநாமம் பெறுகின்றார். வைணவ உலகம் பெற்றோர் இட்ட பெயரை மறந்து விடுகின்றது: இந்தச் சிறப்புத் திருநாமமே அவர்கள் மனத்தில் நிலைத்து விடுகின்றது. பிரபந்தங்கள் அருளல் : தொண்டரடிப் பொடியாழ் வாருக்கு அரங்கநாதன் தத்துவ ஞானம் அளித்தார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. அவர் தனது பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகை நிலையையும் தெளிவாக விளக்கியருள்கின்றார். இவற்றுள் ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில்தான் மிகவும் ஈடுபாடு காட்டுகின்றார். எம்பெருமான் உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றினுள்ளும் திருவரங்கத்து நம்பெரு ஆமாளை யல்லது பிறிதொரு பொருளை யறியாராய் 11. பெரு, திரு. 2: 2