பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

ஆழ்வார்களின் ஆரா அமுது


அப்பெருமானுக்கே துளவத் தொண்டு பூண்டு வாழ். கின்றார். தமது அநுபவத்தைப் பிரபந்தங்கள் மூலமாக பிறருக்குத் தெரிவிக்கக் கருதி திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்ற திவ்வியப் பிரபந்தங்களை அருளிச் செய்து உலகப் பெருமக்களை வாழ்விக்கின்றார். இப்பிரபந்தங்களில் அரங்கனைத் தவிர, வேறு எம்பெருமான்களைப் பாடாத தால் இவரைப் பத்தினியாழ்வார் என்று வழங்குவர் வைணவப் பெருமக்கள். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்து திருவரங்கத்தி லேயே பரமபதித்தார் என்று பெரியோர்கள் பணிப்பர். தன் பால் நிறைந்த அன்பு காட்டிய விப்ரநாராயணர் அரச தண்டனையினின்றும் மீண்டு தொண்டரடிப் பொடி களான செய்தியை தேவதேவி அறிகின்றாள். தானும் உய்வு பெற உன்னித் தனது பொருள்களனைத்தையும் அரங்கநகர் அப்பனுக்கே உரிமையாக்குகின்றாள். பின்னர் தான் சத்துவ குணம் நிறைந்த பெண்ணாகக் கோயிலில் திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலிய அடிமைத் தொழில்களைச் சில காலஞ் செய்து வாழ்ந்து, ஊழ்வினையை ஒழித்துத் தனது பிறப்பைப் புனிதமாக்கி நற்கதியை அடைகின்றாள். இவர்தம் அருளிச் செயல்கள் . இவர் அருளிய பிரபந் தங்கள் (i) திருமாலை (2) திருப்பள்ளி எழுச்சி என்ற இரண்டு என்பதை மேலே சுட்டிக் காட்டினேன். அவற்றில் இப்போது ஆழங்கால் படுவோம். வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள்: இந்த ஆழ்வாரின் பாசுரங்கள் இவர்வாழ்க்கையில் சில செய்திகளை அறிய வல்ல அகச்சான்றுகளாக அமைகின்றன. எ.டு: (1) காவலில் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதரு கின்றோம் கமன்தமர் தலைகள் மீதே: 12. திருமாலை-1.