பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ஆழ்வார்களின் ஆரா அமுது

. என்ற திருப்பள்ளி எழுச்சிப் பாசுரத்தால் அறியப்படு கின்றது. (4) இந்த ஆழ்வார் மறந்தும் புறந்தொழா மாந்தர்; பிற சமயங்களைக் கண்டித்துப் பேசுபவர். இதனைச் சில பாசுரங்களால் அறிந்து கொள்ள முடிகின்றது. புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பு ரோதாம் , தலையறுப் புண்டும் சாவேன் சத்தியம் காண்பின், ஐயா! சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவ னாவான் (புலை அறம்-நீச தர்மம், அறக்கற்ற-நன்றாக ஒதின; செற்ற-நாசம் செய்த} இப்பாசுரத்தில் கலையறக்கற்ற மாந்தர்.என்பதற்கு கூரத் தாழ்வான் போன்றாரை எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம். சுருதி சுமிருதி இதிகாசங்களில் நிலை நின்றவர் களாய் வேதாந்தபர்யம் கைப்பட்டவர்கள்; அவர்களா கிறார் - கூரத்தாழ்வான் போல்வாரிறே! என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான சூக்தி. காண்பரோ கேட்பரோதான் என்ற இடத்தில் ஓர் ஐதிகம். கூரத்தாழ்வான் இஷ்டசித்தி என்ற ஒரு புறமதச் சுவடி வாசித்துக் கொண்டிருந்த சிலருடன் கூடிச் சிறிது போது போக்கி எம்பெருமானார் சந்நிதிக்குச் சிறிது தாமதித்து வர, ஏன் இவ்வளவு கால தாமதம்? என்று உடையவர் கேட்டருள, ஆழ்வானும் காரணத்தை உள்ள படியே உரைக்க, ஹா! ஹா! கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான் என்ற அருளிச் செயல் 15. திருமாலை.?.