பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொண்டரடிப் பொடிகள் 2:5 என்னாயிற்று?" என்று மறுமுறைத் தீர்த்தமாடச் செய்து பூரீபாதது.ாளியும் இடுவித்தருளினாராம். இதில் சிலையினால், இலங்கை செற்றதேவனே தேவனாவான் என்று இராகனையே (விபவம்) தெய்வமாகக் கொண்ட ஆழ்வாரின் உறுதிப்பாடு தெளிவு. அடுத்து, திருமாலை வெறுப்பவர்களைப் பற்றிப் பேசுகின்றார். வெறுப்பொடு சமணர் முண்டர் விதிவில்சாக் கியர்கள், நின்பால் பொறுப்பரி யனகள் பேசில் போவதே கோய தாகி, குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா கரு ளானே' " இமுண்டர்-சைவர்; சாக்கியர்.பெளத்தர்,; திருமால் பற்றிய வசவுகளைக் கேட்டால், அதுவே நோயாகி முடிந்து போவது உத்தமம். அப்படி இல்லாவிடில், சந்தர்ப்பம் வாய்த்தால், தனக்கு ஆற்றலும் இருந்திால், நிந்தித்தவன் தலையை அறுத்துத் தள்ளுவதே என் இலட்சியம் என்கின்றார். திருமாலைத் தவிர வேறு தெய்வமில்லை என்ற தன் ஊற்றத்தை ஒரு பாசுரத்தால் தெரிவிக்கின்றார். மற்றுமோர் தெய்வம் உண்டோ மதியிலா மானி டங்காள்! உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டிர் 16. திருமாலை.8.