பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

ஆழ்வார்களின் ஆரா அமுது


அற்றமே லொன் றறியீர் அவனல்லால் தெய்வ மில்லை கற்றினம் மேய்த்த எங்தை கழலினை பணமி லீரே' (மதி. தத்துவ ஞானம்; உண்டோ.இல்லை; அவன். எம்பெருமான்; கழல் இணை.இரண்டு திருவடிகள்: பெறுதற்கரிய மானிடப்பிறப்பைப் பெற்றிருந்தும் ஈடேறுதற் குரியதான பரமான்மாவைப் பற்றிய தத்துவஞானம் இல்லாமையால் மதி இலா மானிடங்காள்!" என்கின்றார். ஒண்டாமரையாள் கேள்வன் ஒைருவனையே நோக்கும் உணர்வு 1 என்ற பொய்கையாழ்வார் கூற்றுப்படி பரமான் மாவைப் பற்றிய அறிவே அறிவெனப் படுமாதலால், மற்றை உலக அறிவு இருந்தும் பரமான்மாவைப் பற்றிய அறிவைப் பெறாத இவர்கள் மதியிலா மானிடங்களாயினர்; இதுபற்றியே மானிடர் காள் என உயர்திணை வாய் பாட்டால் கூறாது மானிடங்காள்!" என அஃறிணை வாய்பாட்டால் கூறியதையும் காணலாம். அற்றமே லொன்றறியீர்: வேதத்தில் பலவிடங்களிலும் சிறு தெய்வங்களைப் பற்றி (எம்பெருமானைப் போலவே) சிறப்பித்துக் கூறியிருப்பது கண்டு அவற்றிற்கு மேலெழுந்த வாரியாகத் தோன்றுகின்ற பொருளையே கருத்தாக எண்ணி வேதங்கள் முழுவதும் சீமந்நாராயணனையே பரம்பொருளாகக் கருத்துப் பொருளால் கூறுவன என்பதை உய்த்துணராமலிருக்கின்றீர்” என்கின்றார். அற்றம்.மறை பொருள்; உட்கருத்து. அவன் அல்லால் தெய்வம் இல்லை’ என்பதால் தேவதாந்தரங்கள் இல்லை என்று மறுக் கின்றாரல்லர் ஆழ்வார்; எம்பெருமானுக்குச் சரீரமாகப் 17. டிெ . 9. 18. முதல். திருவந்.67