பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** XX?!}{íʻ பக்தியுகத்தைத் தோற்றுவித்த மூல புருடர்கள்ான் மும்மணிகள் என்று கொள்வது மிகப் பொருத்தமாகும்’ (பக். 150). 1. உவமை : எழுத்தாளர்களை ஏந்திச் செல்லும் நடையை அழகுபடுத்த உதவுவது உவமை அணிகளாகும். கூறுவோனின் கருத்து நயத்தை கேட்போனின் உள்ளத்தில் எளிமையாக ஆழப் பதிய வைக்கும் ஒருவித யுக்தியே உவமையாகும். இதனால் கவிஞர்கட்கும் எழுத்தாளர் கட்கும் உவமையணி வலக்கையாக நின்று தன் பணியை நிறைவேற்றுகின்றது. இந்நூலில் உவமைகள் தக்க இடத்தில் தக்கவாறு அமைந்து கருத்துகளை எளிமையாக்கி இருப்பதைப் பலவாறாகக் காணலாம். (1) எழு ஞாயிறு இருளை ஒட்டுவதுபோல், இருட் சக்திகளான அஞ்ஞானம், அதர்மம் முதலியவற்றை ஈசுவர சக்தி ஒட்டிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார் இப்பரமஞானி (பக். 51). (2) அமுதபானம் பண்ணி வைப்பவர்கள் பாலையும் சோற்றையும் பிறவற்றையும் கண்ணெடுத்துப் பார் ப் பார் க ேளா? - இவரும் மேற்றொன்றினை என்கின்றர்ர்டவேறொன்றின் பேர் சொல்லவும் கூசுகின்றார் (பக். 74), (3) வானநூல் அறிஞர்கள் பூமியின் சிறுமையையும் அதன்ை ஈர்த்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வதுபோல், பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும் எல்லா உயிர்களையும் புரக்கும் இறைவனின் பெருமையையும் பேராற்றலையும் உணர் கின்றனர் (பக். 110). (4) ஆட்டில் தாடையில் தொங்கும் முலை (அதர்) போலே என்னையும் என் தாய் வீணாக அன்றோ பெற்றாள்?’ (பக். 251). ச. மேற்கோள் : கூறும் கருத்துகளைத் தெளிவு படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் உதவுவது பொருத்தமான மேற்கோள்களாகும். இத்தகைய உயர்ந்த