பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 ஆழ்வார்களின் ஆரா அமுது அவர்களிடத்தில் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள் ளுங்கள் என்று உபதேசித்தருளி உனக்குச் சமமாக அவர்களை ஆராதிக்கும்படி உரைத் தருளினாய் - இதனை ஆழ்வார் எம்பெருமானிடம் தெரிவிக்கின்றார். அடியார்களிடம் சாதி வேறுபாடுகள் இல்லை; அப்படிப் பாவிக்கவும் கூடாது என்று தெரிவித்தபடி, அன்டர்களே. இதையொட்டி ஆசாரிய ஹிருதயத்தில் வருகின்ற சூத்திரம் ஒன்றையும் விளக்குவேன். மிலேச்சனும் பக்தன் ஆனால் சதுர் வேதிகள் அதுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குைைதவத்தோடு ஒக்கப் பூஜை கொண்டு பாவங் தீர்த்தப் பிரசாதனாம் என்கிற திருமுகப் படியும்..." இபாவநம் . துய்மை) என்பது சூத்திரப்பகுதி. இதன் பொருளை விளக்குவேன். மிலேச்சனும் பக்தன் ஆனால்: என்னுடைய அடியார்கன் பக்கல் அன்பும், என்னை ஆராதிப்பதில் உகப்பும், தானே ஆராதிக்கையும், என்னிடத்தில் ஆடம்பரமின்றி இருத் தலும், என் கதையைக் கேட்குமிடத்தில் பக்தியும், பக்தியின் காரியமான குரல் தழுதழுத்தலும், கண்ணிர் சொரிதலும், மயிர்க்கூச்செரிதலும், எப்பொழுதும் என்னை நினைப் பதும், என்னிடமிருந்து வேறு பயன்களைக் கொள்ளா திருத்தலும் - ஆகிய எட்டுவித பக்தியானது எந்தக் கீழ்க் குலத்தானிடம் இருக்கின்றதோ என்று பகவச் சாஸ்திரம் சொல்லுகிறபடி கீழ்குலத்தவனாய் உள்ளவனும் இந்த எட்டுவிதமான பக்தியையுடையவன் ஆனால், 20. ஆசா. ஹிரு. 85, இவ்விடத்தில் பூரீவசன பூஷணத்தின் 226 - 239 சூத்திரங்களையும் அவற்றின் வியாக்கியானத்தையும் படித்தறிதல் தகும்.