பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 219. சதுர்வேதிகள் அதுவர்த்திக்க அறிவு கொடுத்து: "எட்டு: விதமான பக்தியையுடைய அவன் கீழ்க்குலத்தானாயிலும் அவனே பிராமனோத்தமன், அவனே முனிவன், அவனே செல்வத்தையுடையவன், அவனே துறவி, அவனே பண்டிதன், அவனுக்கு ஞானத்தைக் கொடுக்கக் கடவன். அவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ளக் கடவன்' என்றும் (பகவச் சாஸ்திரம்), பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்களாகில், தொழுமினிர் கொடுமின் கொள்மின்' (திருமாலை - 42) என்று ஆழ்வார் சொல்லுகிறபடியே எல்லாரிலும் மேம்பட்டவர்களாகிய உயர்சாதியினர்களான பிராமணர்கள் உயர்குலத்தில் பிறத்தல் முதலியவற்றால் உளவாய செருக்கினால் கெடுக்கப்பட்ட தங்களுடைய ஆன்மசொரூபம் தூய்மை பெறும் பொருட்டுச் சார்ந்து பழகுவதற்கு உரியவர்களாய், அவர்கள் ஞானத்தைப் பெறவிரும்பினால் அவர்கட்கு ஞானத்தைக் கொடுத்து, குலதைவத்தோடு ஒக்க பூஜை கொண்டு: நான் பூசிக்கப் படுவதுபோன்று அவனும் பூசிக்கத் தக்கவன்" என்றும், நின்னொடும் ஒக்க வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே' (திருமாலை - 42) என்று ஆழ்வார் சொல்லுகிறபடியே, என்னுடைய நாதனும் என்னுடைய குல தெய்வமுமான அரங்கநாதன்' என்று குலதெய்வமாகச் சொல்லப்படுகின்ற சர்வேசுவானோடு ஒக்க கடல் மல்லைத் தலசயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வமே' (பெர் . திரு. 2.6:4) என்று திருமங்கையாழ்வார் சொல்லுகிற படியே குலதெய்வமாக அவர்களைப் பூசை கொண்டு, பாவங் தீர்த்தப் பிரசாதன் ஆம் என்ற திருமுருகப் படியும்: *அவன் திருவடி விளக்கின தண்ணீர் ஒப்பு இல்லாத தீர்த்தம், அவன் உண்டு கழித்த சேடம் மிக்க தூய்மை புடையது (பகவச்சாஸ்திரம்) என்கின்றபடியே, அவன்