பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

ஆழ்வார்களின் ஆரா அமுது


இவற்றையெல்லாம் விளக்கிக் கொண்டு போவதற்குக் காலம் இடந்தராததாகையால், இந்தப் பாசுரங்களை நீங்களே படித்து அறிய வேண்டுகின்றேன். எனினும், ஒன்றிரண்டு க ட் ட முற்படுகின்றேன். முதலில் திருவரங்கத்தின் சூழ்நிலையை அற்புதமாகக் காட்டுவார். வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல்மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணிதிரு அரங்கம்' முரலும்.ரீங்காரம் செய்யும்; ஆலும்.கூத்தாடும்: அணவும்.படியும் i இந்தச் சோலையின் நடுவே அமைந்த திருக்கோயிலின் அரங்கமண்டபத்தில் பச்சை மாமலை போல் மேனியையும் பவள வாயையும் செங்கண்ணையும் உடைய அச்சுதன் அறிதுயில் கொண்டிருக்கின்றான். எப்படித் துயில் கின்றான்? ஆழ்வார் கூறுவார்: குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக் கடல்நிறக் கடவுள் எங்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகு மாலோ!' என்று உள்ளம் உருகிப் பாடுகின்றார். நாமும் அக் காட்சியை மானசீகமாகக் கண்டு அநுபவிக்கின்றோம். இது சற்று எட்ட நின்று காணும் காட்சி. கிட்டச் சென்று காணும் காட்சியை, 25. திருமாலை.14 26, டிெ, 19