பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 225, மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்த டக்கி, காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து, வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.”* மேம்பொருள் - மக்கள் விரும்பும் பொருள்கள்: மெய்ம்மை.ஆன்ம சொரூபம்; காம்புஅற-அடி யோடு; தலைசிரைத்து.தலையிலுள்ள சுமையைத் தொலைத்து; தலைக்கடை.வாசல்.1 என்பது பாசுரம். இதில் மேம்பொருள் என்பதற்கு (1) மேலெழுந்த பொருள் என்றும், (2) மேவின பொருள் என்றும், (3) மேம்பாட்டை விளக்கும் பொருள் என்றும் மூன்று விதமாகப் பொருள் கூறலாம். (1) கருமங்கள் காரணமாக வந்தேறியாய்ப் பகவத் உணர்ச்சி வந்தவாறே விட்டகலும்படியாக இருக்கும் பொருள்-மேலெழுந்த பொருள் எனப்படும். அதாவது, சம்சார சம்பந்தம் , (2) மேவின பொருளாவது, சிக்கென ஒட்டிக் கொண் டிருக்கும் பொருள்; சேதநனால் பிரிக்கவொண்ணாதபடி இருக்கை; அதாவது, தேக சம்பந்தம், அவித்யை சம்பந்தம். (3) மேம்பாட்டை விளைக்கையாவது, த ன் ன ல் பற்றினாரை எல்லாம் அறிந்தவராக அபிமானித்திருக்கும் படி பண்ண முடிதல். அப்படிப்பட்ட பொருளாவது, பிரகிருதி, பிராக்கிருத பதார்த்த சம்பந்தம். இவற்றை வாசனையுடன் ஒழித்து உடலை ஆன்மாவென நினைத்தல், உடலைப் பற்றின பிராக்கிருதபதார்த்தங்களில் இவை என்னுடையவை என்கின்ற மமதா புத்தி, உடலினின்றும் 28. திருமாலை38 15