பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv மேற்கேள்கள் கையாளப் பெற்றிருப்பதை இந்நூலில் பரக்கக் காணலாம். அவற்றுள் சில: (1) வாமனன் ஒட்டராவந்து : இந்த வாக்கியம் சந்தர்ப்பஸ்வாரஸ்யத்தால், பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வது: ஒரடி மண்ணுக்குப்ப பதறுமவன், இவர்களைப் பெறும் போதைக்கு, ஆறியிரானிறே. ஆஸுரப்பிரகிருதியான மகாபலி முன்னே கழஞ்சு மண்ணுக்குப் பதறி நடக்குமவன், இவளொடு தலை யானால், ஆறியிரானிறே. காற்றில் முன்னம் கடுகி ஒடிவரக் கடவனிறே" என்பது (பக். 35). 'வாமனன்’ என்ற சொற்பொருளை விளக்குவதற்கு எடுத்துக் காட்டப் பெற்ற மேற்கோள் எவ்வளவு பொருத்தம்! (2) கமல பாதம் வந்து என், கண்ணின் உள்ளது ஒக்கின்றதே (1) என்கின்றார். இவ்விடத்தில் முமுட்சுப்படியின் (146) இரண்டு வாக்கியங்கள் அதுசந்திக்கத் தக்கனவாகும். பிராட்டியும், அவனும் விடினும், திருவடிகள் விடாது திண்கழலயாயிருக்கும்’ என்பது ஒன்று (பக்.51), (3) இத்தனை காலமாய் பாவங்களுக்கு இருப்பிடமாயிருந்த என் நெஞ்சை அப்பாவங்களை யோட்டிவிட்டுத் தனக்கு இருப்பிட மாகக் கொண்டான்' என்கின்றார் முன் இரண்டு அடிகளில், இந்த இடத்தில் நம்மாழ்வாரின் கல்லும் கனைகடலும் (பெரிய. திருவந். 68) என்ற பாசுரம் அநுசந்திக்கத் தக்கது (பக். 67). (4) திருமலைக் காட்சிகள் : பெரும்பாலும் எல்லா ஆழ்வார்களும் அர்ச்சாவதாரத்தில்தான் அதிக ஈடுபாட்டைக் காட்டு வதைப் போல் இந்த மூவரும் (முதலாழ்வார்கள்) அந் நிலையிலேயே அதிகம் ஈடுபடுகின்றார்கள். 'பூகதஜலம் போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே பரத்வம்: பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே விபவம்: அதிலே, தேங்கின மடுக்கள் போலே