பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொண்டரடிப் பொடிகள் 227 ஈசுவரன் இல்லை, சாத்திரம் இல்லை, பரலோகம் இல்லை என்றாற்போலே எல்லாவற்றையும் இல்லாது செய்து சாத்திரங்களில் விதிக்கப் பெற்ற கர்மங்களை அநுட்டி பாமல் தமக்குத் தோன்றியவற்றைச் செய்பவர்கள். வாழுஞ் சோம்பராவார் - சாத்திரத்தில் நாத்திகராய் செய்யப்படவேண்டியவற்றை விடாமல் ஆத்திக சிகாமணி களாய் சித்தோபாயமான எம்பெருமானை மனத்தில் கொண்டு அவ்வெம் பெருமானுடைய அதுபவமே காலட் சேபமாய் தமது இதத்தைத் தாமே தேடிக் கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள், (9) இவருடைய பாசுரங்களில் வைணவ சித்தாந்தக் குறிப்புகள் வந்திருப்பதை எடுத்துக்காட்டி விளக்கலாம். காலச் சுருக்கம் கருதி அவற்றை விட்டு வைக்கின்றேன். (10) இந்த ஆழ்வார் வடநூல் பயிற்சி மிக்கவர் என்பதைக் கத்திரபந்துவின் கதையினாலும் தமன்.முட்கலன் உரையாடல்களாலும் பிறவற்றாலும் நன்கு அறியலாம். இந்த இரண்டும் பற்றி ஈண்டு விளக்குவேன். இவை இரண்டும் எம்பெருமானின் திருநாமத்தின் பெருமையை விளக்க எழுந்தவை. கத்திரபந்து' இவன் கொடிய நடத்தையுடையவன்; பல்வகைப் பாவங்களே உருவெடுத்தாற் போன்றவன். இவன் தாய் தந்தையர், மக்கள், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவராலும் கைவிடப்பெற்றுக் காட்டில் திரிந்து உயிர்க் கொலை புரிந்து வயிறு வளர்த்துக் காலம் கழித்து வந்தான். இங்ங்ணம் நெடுங்காலம் சென்றது. ஒருநாள் மாமுனிவர் ஒருவர் கொடிய நண்பகவில் வெப்பம் தாங்காமல் வழி தப்பிப் போகா நின்றவர் இப்பாவி திரியும் கானகத்தில் புகுந்து இவன் கண்ணுக்கு இலக்காயினர். அவருடைய பரிதாப நிலையைக் கண்ட இவனுக்குத் 30 விஷ்ணு தர்மத்தில் - 97-வது அத்தியாயத்தில் இவனைப் பற்றிய வரலாறு விரிவாகக் கூறப்பெற்றுள்ளது.