பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 22% அடைந்தான். பின் அந்தணர் குலத்தில் முற்பிறப்பு உணர் வுடன் பிறந்தான், அவனுக்குக் கொடிய சம்சாரத்தில் வெறுப்பு உண்டாயிற்று. தனக்கு இவ்வுயர் குலத்தில் பிறவி நேர்ந்ததும், முற்பிறப்பின் நினைவு ஏற்பட்டதும் முன்பு பண்ணின கோவிந்தநாம சங்கீர்த்தனத்தின் பயன் என்பதை உணர்வானாயினன். தனக்கு மேவான நன்மையை விளைத்த அந்தக் கோவிந்தனையே ஆராதனம் செய்து தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம் மிகும் உடலை விட்டு (திருவரங்கக்கலம்பகம்.17) மாயவன் சேற்றள்ளல் பொய் நிலத்தைக் கடந்து நலமந்தமில்லதோர் நாடுபுகும்" (திருவாய் 2,3,4) எண்ணத்துடன் துணிந்து அங்ங்ணமே செய்து பரமபாகவதனாகி வீடுபேறும் எய்தினன் என்பது வரலாறு. மொய்த்தவல் வினையுள் கின்று மூன்றெழுத் துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்: இத்தன்ை அடியார் ஆனார்க்கு இரங்கும்.கம் அரங்கன் ஆய பித்தனைப் பெற்றும் அந்தோ! பிறவியுள் பிணங்கு மாறேல் fமொய்த்த-அடர்ந்து கிடக்கிற வல்வினை-கொடிய பாவம்; மூன்றெழுத்து உடையபேர்.கோவிந்த: கத்திர பந்து.கடித்திர பந்து; பராங்கதி.சிறந்த பதவி; இரங்கும்-அருள் புரியும், பித்தன்.அண்டின வரிடத்தில் மயங்கியவன்; பிறவி . சம்சாரம்: பிணங்கும்.வருத்தும்) என்ற பாசுரத்தில் இவனைப்பற்றிய குறிப்பு வருகின்றது. 31. திருமாலை 4.