பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 233 பாரதியாரின் கற்பனை நம் உள்ளத்தைக் கவர்வதாக உள்ளது. ஆழ்வார் காலம்: திருமங்கை மன்னனும் இந்த ஆழ் வாரும் ஒரே காலத்தவர்கள் (ஏழாம் நூற்றாண்டு) எனக் கருதுவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள்." திருமங்கையாழ்வார் திருவரங்கம் திருமதிலையும் சிகரங் களையும் பெருஞ்செலவிட்டுக் கட்டுவித்தபொழுது தொண் டரடிப் பொடியாழ்வார் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து மலர்த்தொண்டு செய்துவந்தார் என்று குரு பரம்பரைக் கதைகள் கூறுவதாலும், திருமங்கையாழ்வார் காலத்தே சமணம் முதலிய புறச்சமயங்கள் வைதிகச் சமயக் கடவுளரை இகழ்ந்து வந்த செய்தியை இந்த ஆழ்வார் குறிப் பிடுவதாலும் இங்கனம் பேராசிரியர் கருத நேர்ந்தது. ஆயினும் இந்த ஆழ்வார் திருமங்கை மன்னன் காலத்திற்கு முற்பட்டவர் என்றே எனக்குத் தோன்றுகின்றது.?? இந்த ஆழ்வாரை இன்று, மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியே! மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே! தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வ மென்றான் வாழியே! திருமாலை ஒன்பத்தஞ்சும் செப்பினான் வாழியே! பண்டுதிருப் பள்ளிஎழுச்சிப் பத்துரைத்தான் வாழியே! பாவையர்கள் கல்விதனைப் பழித்தசெல்வன் வாழியே! தொண்டுசெய்து துளயத்தால் துலங்கினான் வாழியே! தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே! ' என்று வைணவ உலகம் வாழ்த்திப் போறறுகின்றது, 36. ஆழ்வார்கள் காலநிலை - பக். 159. - 37. Religion and Philosophy of Nalayira Divya Prabandham with Special Reference to Nammalvar (Ph. I). Thesis) - p. 223. 38. அப்புள்ளை: ஆழ்வார்கள் வாழித் திருநாமம் . 88.