பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.235 ஆழ்வார்களின் ஆரா அமுது கோடு) என்னும் இராஜதானியில் ஆண்டு வந்தவன் கதிர்பு:விருதன் என்னும் அரிசன். இவனுடைய அரச கிாதேவி நாத நாயகி. பல்லாண்டுகள் இவர்கட்கு மக்கட் பேறு இல்லை. பின்னர் திருமாலுக்குச் சிறப்பான ஆராதனங்கள் செய்து வழிபட்டதன் காரணமாக மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் இளவரசராகத் தோன்றி னார். இவரைத் திருமாலின் மார்பிலுள்ள கெளத்துவ மணியின் அவதாரமாகக் கொள்வர் வைணவப் பெரு மக்கள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் குலசேகரன் ன்ைபது. இளமையிலிருந்தே திருமால் பக்தியில் தலை சிறந்து விளங்கினார் இவ்வரச குமாரர். பெற்றோர்கள் தம் அருமருந்தன்ன செல்வனை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். தக்க பருவத்தில் நல்லாசிரியரைக் கொண்டு கல்வி கற்பித்தனர். குலசேகரன் சிறிது காலத்தி லேயே நான்கு வேதம், ஆறு சாத்திரம் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தான். அரசருக்கு வேண்டிய வில் வித்தை, நீதி நூல்கள், யானை ஏற்றம், குதிரையேற்றம், படைக் கிலப்பயிற்சி முதலியவற்றையும் ஐயந்திரிபறக் கற்று வல்ல வனாயினான். விரைவில் இளவரசுப் பட்டமும் சூட்டப் பெற்றது. குலசேகரன் த ன து புயவலியால் நால்வகைச் சேனையின் துணை கொண்டு சோழ பாண்டிய அரசர் களையும் வென்று அவர்களைத் தன்வசப்படுத்தினான். 3. கருட வாகன பண்டிதரின் திவ்விய சூரி சரிதம் இவ்வாறு செப்பும். பின்பழகிய பெருமாள் சீயரின் குரு பரம்பரை இவர் அவதரித்த ஊர் கொல்லி மாநகர் என்று கூறும். வேதாந்த தேசிகரும் (தே. பி. 374) மணவாள மாமுனிகளும் (உ. ர. மா. 31) இவர் பிறந்த ஊரை வஞ்சிக்களம் என உரைப்பர்.