பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 23? இதனால் சேர, சோழ, பாண்டி என்னும் தமிழ்நாட்டுப் பகுதிகள் மூன்றுக்கும் தலைமை பூண்டான். இதனால் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன்குல சேகரன்' என்னும்படி பல விருதுகளையும் பெற்றுத் திகழ்ந்தான். நாளடைவில் இவனது தந்தையார் திடவிரதன் இவனுக்குத் திருமுடி சூட்டித் தான் தவம் செய்து உயர் கதி பெறும் பொருட்டுத் தவவனம் சென்றதாக வரலாறு, பரத்துவ விசாரம் : தந்தைக்குப் பிறகு நாட்டை நடு நிலை தவறாது ஆண்டு நற்பெயர் பெற்றான். நல்லதோர் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டு அவள்மூலம் நீளாதேவியின் அம்சமான இளை என்ற ஒரு மகளையும் திடவிரதன் என்று தன் தந்தையார் பெயரையே பெறும் ஒரு மகனையும் பெற்று, மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் கன்மக்கட் பேறு: என்ற வள்ளுவர் வாக்கிற்கு எடுத்துக்காட்டாயினான். கவலையற்ற வாழ்க்கையையும் நடத்தினான். இந்நிலையில் இம்மை மறுமை வீடுபேறு என்னும் மும்மை இன்பங்களையும் தரவல்ல முதலும் முடிவும் அற்ற முழுமுதற்கடவுள் யாரோ என்ற பரத்துவ விசாரத்தில் ஈடுபட்டான். கற்றுத்துறை போய வித்தர் பலருடன் வேதம், புராணம், இதிகாசம் முதலிய நூல்களைப் பரிசோதித்துப் பார்த்தான். இந்நிலையில் கருணாமூர்த்தி யாகிய கமலக் கண்ணனின் திருவருள் நோக்கு அவன் மேல் படவே, சீமன் நாராயணனே முழு முதற்கடவுள் என்ற உண்மை அவனது ஞானக் கண்ணுக்குப் புலனாயிற்று; 4. பெரு. திரு. 2:10 5. குறள்.60 (வாழ்க்கைத் துணை நலம்)