பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

ஆழ்வார்களின் ஆரா அமுது


தெளிவாகவும் விளக்கம் அடைந்தது. எம்பெருமானது அனந்த கல்யாண குணங்களாகிய பெருங்கடலில் ஆழ்ந்து நெஞ்சுருகி நின்று குலசேகராழ்வார் என்ற நிலைக்கு உயர்ந்து பாசுரங்கள் பாடும் பெருமையையும் பெற்றார். இவர் பாடிய பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்ற அருளிச் செயலாக வடிவங்கொண்டு திகழ்கின்றன. இதில் 105 பாசுரங்கள் பத்துத் திருமொழிகளில் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் திருமாவின் விபவாவதாரங்களில்ே இராமகிருஷ்ணாவதாரங்களிடத்திலும், அர்ச்சாவதாரத்தில் திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு ஆகிய திவ்வியதேசத்து எம்பெருமான்களிடத்திலும் மிக்க பக்திப் பெருங்காதல் கொண்டிருந்த நிலையைத் தெளிவாக அறிய முடிகின்றது. அருளிச்செயல் மூலம் அறிவது; இவருடைய அருளிச் செயல்களில் ஆழங்கால் பட்டு அநுபவிக்கும்போது இவருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அகச்சான்று களாகக் கிடைக்கின்றன. இவர்தம் அருளிச்செயல் கொண்டு இவற்றைக் காட்ட முயல்வேன். இராமாயண ஈடுபாடு: கற்பார் இராமபிரானை யல்லால், மற்றும் கற்பரோ?' என்றார் நம்மாழ்வார் 6. எம்பெருமானின் திருமேனி: இது பரம், வியூகம், விடவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து வகைப்படும். பரம் என்பது, வைகுந்தத்தில் எழுந்தருளியிருக்கும் பரவாசு தேவனின் உருவம். வியூகம் என்பது, திருப்பாற்கடலில் வாசுதேவன். சங்கர்ஷணன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்ற உருவங்கள். விபவம் என்பது, எண்ணற்ற அவதார மூர்த்திகள். அந்தர்யாமி என்பது எல்லோருடைய இதய கமலத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை. அர்ச்சை என்பது, திவ்வியதேசங்களில் எழுந்தருளியுள்ள நிலையும், மற்றும் பக்தர்களின் வேண்டுகோளின்படி அவரவர் விருப்பத்திற் கேற்றவாறு திருமேனி கொண்டு நிற்கும் நிலையும், 7. திருவாய். 75:1.