பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

ஆழ்வார்களின் ஆரா அமுது


முற்று வாயிறை சொன்முறை யால் எனாச் சுற்றி னார்வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார்" (எற்றுவாம்-பிடித்து மேலே எறிவோம்; ஏந்துதும் . ஏத்திக் கொள்வோம்; இறை-கரன்: முற்றுவாம் . செய்து முடிப்போம்; வரை. மலை) என்று காட்டுவான். இதனைப் பெளராணிகர் சொல்லக் கேட்டவுடன் இராமகாதையில் தனக்குள்ள அன்பினால் இச்செய்தியை ஆழ்வாரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அந்த நிகழ்ச்சி அன்றுதான் நடைபெறுவதாக நினைக்கின்றார். இப்படிப்பட்ட சங்கடமான நிலையில். தம்மால் இயலும் உதவியைச் செய்யாது விடுவது சிறிதும் தக்கதன்று எனக் கருதுகின்றார். தமது சேனைகளை எல்லாம் போருக்குச் சித்தமாய் முன் செல்லும்படி பணித்துத் தாமும் போர்க்களத்தை நோக்கிப் புறப்படத். தொடங்குகின்றார். கதையில் நடைபெறுவதை கேட்டுக் கொண்டிருக்கும் அன்றுதான் தம்மை மறந்து நிகழ்ச்சி நடைபெறுவதாகக் கருதுவதை ஒட்ட உணர்தல் (Empathy) என்று கூறுவர் திறனாய்வாளர்கள். இஃது உளவியல் அடிப்படையில் அமைந்த ஒன்று. இது தன்னைப் பிறராகவே கருதி உணர்வது. ஒரு சிறு குழந்தை நடுத் தெருவில் உட்கார்ந்து கொண்டு விளையாடுகின்றது. மகிழுந்து (car) ஒன்று அக். குழந்தையை நோக்கி வந்து கொண்டுள்ளது. வண்டி தன்மீது ஏறி விடும் என்ற அச்ச உணர்ச்சியே குழந்தைக்கு இல்லை. ஆனால், அதைக் கண்ணுறும் நாம் அக்குழந்தை நிலையில் இருந்து கொண்டு அச்சவுணர்ச்சியைப் பெறுகின்றோம். நாம் குழந்தையாகவே ஆய்விடுகின்றோம்; ஒடிக் குழந்தை யைத் தூக்கி விபத்தினின்றும் காக்கவும் முற்படுகின்றோம்; இந்த உணர்ச்சியே ஒட்ட உணர்தல் என்பது. இதில் நாம் அடைந்த நிலையைத் தான் ஆழ்வார் அடைகின்றார். இராமனைக் காப்பாற்றவும் துணிந்து செயற்படுகின்றார். 9. கரன் வதை-15,