பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குலசேகரப் பெருமாள் 243 நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் நின்னைத் தொடர, எங்ங்ணம் நடந்து சென்றாயோ? நான் என்ன செய்வேன்!" என்கின்றார் (2). என் செய்கேனே! என்பதனால் இனி, எனக்கு மரணமே கதி!' என்று தொனிக்கின்றதை உணர முடிகின்றது. இப்பதிகத்திலுள்ள ஒவ்வொரு பாசுரமும் நெஞ்சை உருக்கும் தன்மையது. ஈண்டு ஒரு பாசுரத்தைக் காட்டு வேன். கொல்லணைவேல் வரிகெடுங்கண் கெளசலைதன் குலமதலாய்: குனிவில் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்; மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றுஇனிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே: (3) இந்தப் பாசுரத்தை உள்ளம் கனிந்து பாடுங்கால் நாமும் ஆழ்வாரைப்போல் தசரதனாகி விடுகின்றோம்; ஆழ்வார் உணர்ச்சியை நாமும் பெறுகின்றோம். குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கள் உடைக் கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன்; எல்லே பாவமே 9 என்று பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பேசுவது போல, ஆழ்வாரும் தன்னைத் தசரதன் நிலையில் வைத்துக் 10. பெரியாழ். திரு. 3.2:9