பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குேைசகரப் பெருமாள் 243 தேன்ககுமா மலர்க்கூந்தல் கெளசலையும் சுமத்திரையும் சிங்தை நோவ கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு, இன்று கானகமே மிகவிரும்பி துேறந்த வளநகரைத் துறந்து நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்: மனுகுலத்தார் தங்கள் கோவே (10) என்ற இந்த மூன்று பாடல்களையும் இசையூட்டிப் படிக்கும் போது இராமகாதையில் தோய்ந்த ஆழ்வாரின் உள்ளத் தைக் காண முடிகின்றது. (2) இதனை அடுத்த பத்தாம் திருமொழி இராம காதையின் சுருக்கமாகும். இராமசரிதத்தை வால்மீகி பகவான் பேசி அநுபவித்தாற்போல் ஆழ்வாரும் இதைப் பேசி அநுபவிக்கின்றார். கதை வெகுவேகமாக நடைபெறு கின்றது. தில்லைச் சித்திரகூடத்து எம்பெருமான் ஆழ் வாருக்கு இராமனாகவே காட்சி தருகின்றார். இப்பதிகத்தி லுள்ள சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் ஒருபடித் தேனாக இனிக்கின்றதை உணரமுடிகின்றது. இராமனை, உலகனைத்தும் விளக்கும் சோதி, வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்கு, விண்முழுதும் உயக் கொண்ட வீரன் (1) செங்கண் நெடுங்கருமுகில் என்ற தொடர்களாலும், வல்லரக்கர் உயிருண்ட வீரன் (2), வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் (3), திருமகளோடு இனிதமர்ந்த செல்வன் (6) என்ற தொடர்களாலும் அநுபவித்து மகிழ்கின்றார். இந்தப் பதிகத்தில் இரண்டு பாடல்களில் ஆழங்கால் அடுவோம். தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரம் துறந்துதுறைக் கங்கை தன்னை பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து