பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 247 கொங்குமலி கருங்குடிலாள் கெளசலைதன் குலமதலாய்! தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி: கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்துஎன் கருமணியே! எங்கள் குலத்து இன்னமுதே! இராகவனே! தாலேலோ: (3) (எங்கள்குலம் . அரசகுலம்) சுற்றம்எல்லாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே! அற்றவர்க்கு அருமருந்தே! அயோத்திநகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்துஎன் கருமணியே! சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா! தாலேலோ! (6) ஆழ்வார் பெற்ற இராமாநுபவத்தை நாம் பெறும்போது ஒவ்வொரு பாசுரமும் ஒருபடி அமுதமாக இனிப்பதை உணரமுடிகின்றது. கிருஷ்ணாவதார அநுபவம்: அன்பர்களே, ஆழ்வாரின் கிருஷ்ணாவதார அநுபவத்திலும் ஆழங்கால் படுவோம். இரண்டு திருமொழிகளில் (திருமொழி - 6, திருமொழி - 7) இ ந் த அநுபவத்தைக் காணமுடிகின்றது. ஒ ன் து கண்ணனைப் பெற்றெடுத்த தேவகி அநுபவமாகவும், மற்றொன்று கண்ணனைக் காதலித்த கன்னியர் ஊடி. அவனை எள்குதலாகவும் நடைபெறுகின்றது, (1) தேவகியின் அநுபவம்: அன்பர்களே, கண்ணனை ஈன்றவள் தேவகி; வசுதேவனின் தேவிகள். இவனைக் கடுஞ் சிறைவாசத்தில் பெற்றவள். மக்கட்பேற்றை