பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252 ஆழ்வார்களின் ஆரா அமுது, என்ற வள்ளுவர் பெருமானின் வாக்கையும் சிந்தித்து மகிழ்கின்றோம். பின்னும் பேசுகின்றார் தேவகி நிலையில் ஆழ்வார்: ஒருமுலையை வாய்மடுத்து ஒரு முலையை கெருடிக்கொண்டு இருமுலையும் முறைமுறையாய் ஏங்கி ஏங்கி இருந்து உணாயே' என்று பெரியாழ்வார் யசோதை நிலையில் கண்ணனை வேண்டிக் கொண்டு அதனைப் பெற்றனள் என்பதை அறிந்த தேவகி அப்பேறு தனக்கு நேராது போனதுபற்றி வருந்து கின்றாள். என்னுடைய குடங்கையில்' பொருந்தி இருந்து தளிர்போன்ற அழகிய நின் ஒரு திருக்கையால் என்னுடைய ஒரு முலைக்காம்பை நெருடிக் கொண்டும் மற்றொரு முலைக்காம்பை நின் திருப் பவளத்தில் வைத்துக் கொண்டும் நடுவே என் முகத்தை நோக்கிப் புன்முறுவல், செய்து கொண்டும் அழகிய நின் இரண்டு திருக்கண் களாலும் பார்க்கின்ற பார்வையையும் அநியாயமாய் இழந்தேனே!" (7) என்கின்றாள், தமிழ்ச் சான்றோர்களே, ஆழ்வார் பேசியவற்றை என் புன் சொல்லைக் கொண்டு கேட்டீர்கள். இனி, அவருடைய பேச்சை அவர்தம் சொற்களாலேயே மூன்று பாசுரங்களில் காட்டுவேன். முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் நிலையும், வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் 14. பெரியாழ், திரு. 2.2:8 (அம்மம் Tೋವಾ அழைத்தல்) 15. குடங்கை-முழங்கை; குடங்கால்-முழங்கால் என்று: பொருள் கொள்வது போல.