பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குலசேகரப் பெருமாள் 255 வெண்ணெய் வெளிப்படாது; நானும் ஒருதலை பற்றிக் கடைந்தால்தான் விரைவில் வெண்ணெயைக் காணலாம்" என்று வாயாற் சொல்வி, உள்ளே வேற்று நினைவு இருக்கும்படி தோன்றத் திருட்டு விழி விழித்து, மயிர் முடி அவிழ்ந்து அலையும்படியாகவும், தாமரையில் முத்துப் படித் தாற்போலே ஒளி பொருந்திய நின் முகம் வேர்க்கும்படி யாகவும் செவ்வாய் துடிக்கும்படியாகவும் அவளோடு கூடி நீ தயிர் கடைந்த கதை எனக்குத் தெரியும், அப்பா!' என்கின்றாள். இன்னமும் அங்கேயே சென்று தயிர் கடைவாய். இங்கே உனக்கென்ன வேலை?” என்பது ாைடல் உள்ளுறை (2). மற்றொருத்தியின் மாற்றம் இது: கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன்யால் மருவி மனம்வைத்து மற்றொ ருத்திக்கு உரைத்தொரு பேதைக் குப்பொய் குறித்துப் புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்தி, அவளுக்கும் மெய்ய னல்லை கருதிறுத் தாய்!உன் வளர்த்தி யூடே வளர்கின்ற தாலுன்தன் மாயை தானே (3) கண்ணபிரானின் காதல் நாடகம் இதில் குறிக்கப் பெறு: கின்றது. உன் வண்டவாளம் தெரிகின்றது. என்னை விட்டு அப்பாற் செல்க!" என்பது குறிப்பு (3). ஒரு பெண்மணியின் பேச்சு இது : நின் தாய் யசோதை முலையில் பாலமுது இருக்க அதனை விரும்பாமல் தவழ்ந்து கொணடும், தட்டுத் தடுமாறி நடந்து கொண்டும் சென்று பூதனையின் முலையில் வாயை வைத்து அதன்மீது தடவியிருந்த நஞ்சை அமுது செய்து, பைத்தியக்காரன் என்று பிறரெல்லாம் பரிகசிக்கும்படி நின்றாய். நான் அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவும், நீ நான் அனுப்பிய துரதியுடன் மிகுபோகத்தை நன்கு