பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

ஆழ்வார்களின் ஆரா அமுது

, அநுபவித்தாய். இச்செயலும் தின் தீம்புக்குத் தகுதி வாய்ந்தது போலும்!" என்கின்றாள் (4). வேறொருத்தியின் பேச்சு இது : மின்னொத்த துண் ணிடையுடைய நங்கை யொருத்தியை அனைத்துக் கொண்டு கும்மிருட்டிலே பீதாம்பரத்தாலே முட்டாக்கு இட்டுக் கொண்டு நீயும் அவளுமாகப் போனதை என் கண்ணாலே கண்டேன். இவ்வாறு போக விரும்பிய நீ. இருளன்ன மேனியைத் திறந்து கொண்டு போகலாம்; அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்திக் கொண்டு போகலாம். அங்ஙனம் செய்தாய் அல்லை. போவதற்கு வேறு வழி இல்லையா? நான் கண்டு வயிறெரிய வேண்டும் என்றே என் தெருவழியே சென்றாய். அன்றியும் கண்ணில் தென்பட்ட வேறொருத்தியை உனக்கே அற்றுத் தீரும்படிக் கடைக்கணித்து இன்ன இடத்துக்கு வா" என்று குறியிடம் சுட்டியதையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அந்தப் பெண்மணியை விட்டு இங்கு எதற்காக வந்தாய்? சுவாமி! இனிமேல் அவர்களிடத்தே கடைகட்டு ' என்கின்றாள் (5). வேறொரு பெண்மணி இவ்வாறு பேசுகின்றாள்: மற்பொரு தோள்உடை வாசு தேவா! வல்வினை யேன்துயில் கொண்ட வாறே இற்றை இரவிடை யேமத் தென்னை இன்னனை மேலிட்டு அகன்று கீபோய் அற்றை யிரவுமோர் பிற்றை நாளும் அரிவைய ரோடும் அணைந்து வந்தாய் எற்றுக்கு கீனன் மருங்கில் வந்தாய்? எம்பெரு மான்கீ எழுந்த ருளே. (6) "மல்லர்களோடு போர் செய்யக் கற்றாயேயன்றி என்னோடு சிருங்கார ரசாதுவபம் பண்ணக் கற்றிலை காண் : என்ற வசை தோன்ற மற்பொரு தோளுடை வாசுதேவா என்று.