பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

ஆழ்வார்களின் ஆரா அமுது


லடித்தும் காலால் துகைத்தும் என் சினத்தைத் தணித்துக் கொள்வேன் என்ற கருத்தைத் தெரிவித்தார். அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ங்ணம் அரையர் காட்டிய அபிநயத்தைக் கடைக்கணித்து அசையர்க்கு சுவை அநுபவம் போதாது என்று திருவுள்ளம்பற்றி கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் கோபியரே கதி என்றிருக் கின்ற கண்ணனுக்கு அது வருத்தமோ? வேப்பிலை யுருண்டையோ? இஃது அவனுக்கு கிடைத்தற்கரிய செயலாகுமன்றோ? ஆகையால் அதுவன்று கருத்து; முகங் கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் சினத்தைத் தணித்துக் கொள்வேன் என்னும் கருத்துத் தோன்ற, கையிட்டு முகத்தை மறைத்துத் திரிய வைத்தருளிக் காட்ட வேண்டும் என்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்பது எல்லோரும் அறிந்த தொன்று. இறுதியாக ஒருத்தியின் பாசுரம்: மங்கல கல்வன மாலை மார்வில் இலங்க, மயில்-தழைப் பீலி சூடி பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி, பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழல்இனிது ஊதி வந்தாய், எங்களுக் கேஒரு நாள் வந்து ஊத உன் குழ லின்னிசை போத ராதே, (9) இங்ங்ணம் வரும் பாசுரங்களை அதுட:வித்துப் படிக்கும் போது முதலில் ஆழ்வார் காலத்துக்கும், அடுத்துக் கண்ணன் வாழ்ந்த காலத்திற்கும் தள்ளப்படுகின்றோம். சிறப்பான நிகழ்ச்சி: இவர் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். எம்பெருமானுடைய திவ்விய சரிதங்களைக் கேட்பதில் மிக்க அன்புடையவரான குலசேகரப் பெருமாள் திருவரங்கம் பெரிய கோயிலின் மேன்மையைப் புராணங்க்ள்