பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

ஆழ்வார்களின் ஆரா அமுது


தம்மை மறந்த நிலையில் இருக்கையில் அமைச்சர்கள். திருவாபரண திரள்களினின்றும் ஒரு வைரமாலையை ஒளித்து வைக்கின்றனர். திருமேனிகட்கு அலங்காரம் செய்யும்போது அவ்வணிகலத்தைக் காணாது கவலைப் பட்ட அருச்சகர்கள் இச்செய்தியை அரசர்க்கு அறிவிக் கின்றனர். அரசர் மிகவும் மனம் கலங்கி அமைச்சர்களை அழைத்து கள்வனைக் கண்டுபிடிக்குமாறு ஆணையிடுகின் றார். இதனையே காரணமாகக் கொண்டு அவர்கள், க.இதனைக் களவாடியவர் வைணவரேயன்றி வேறு எவரும் அல்லர். இவர்களே எப்போதும் இங்குமங்கும் தட்டின்றித் திரிகின்றனர். அன்னியன் அஞ்சாது இத்தொழில் செய் பான்" என்று அடியார்கள்மீது அடாப்பழி சுமத்துகின் றனர். இக்கடுஞ்சொல் தம் செவியில் புகப்பெற்ற ஆழ்வார் க.அரியடியார் நல்லவர்கள். அவர்களை ஐயுறுதல் அடாது. இதனை உங்கட்கு உறுதி செய்ய யானே மெய்ப்பிப்பேன்." என்று கூறி கொடிய நாகம் உள்ளிட்ட ஒரு குடத்தை அவையின் முன் தருவிக்கின்றார். திருமாலடியார் மனம் மொழி மெய்களால் தூய்மையானவராயின் இப்பாம்பு என்னை ஒன்றும் செய்யாது. இல்லையாயின் இஃது இப் பொழுதே என்னைத் தீண்டிக் கொல்லும் என்று சூளு ரைத்து அக்குடத்தினுள் கைவிடுகின்றார். சத்தியத்துக்குக் கட்டுப் பட்டு அரவம் அவரைத் தீண்டாது தணிந்திருந்தது. ஆாங் கெடப்பரன் அன்பர் கொள்ளார் என் றவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பின் கையிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்த செங்கோல் கொல்லிகாவலன் வில்லவர்கோன் சேரன் குலசேக ரன் முடி வேந்தர் சிகாமணியே. 18 என்ற தனியனால் இந்நிகழ்ச்சி உறுதிப்படுகின்றது. 16. தனியன் (மணக்கால்நம்பி அருளியது).