பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெகுமாள் 26? இதனைக் கண்ட அமைச்சர்கள் தமது சூழ்ச்சி சிறிதும் வலியாதொழிந்தமைக்கு வருத்துகின்றனர்; ஆராய்ச்சி யின்றி இத்தவறு செய்தமைக்கு அநுதாபப்படுகின்றனர். தமது கதி யாதாகுமோ என்று பேரச்சம் கொள்ளுகின்றி. னர். தமது பிழையைப் பொறுத்தருளுமாறு அரசரின் காலடி. வில் வீழ்கின்றனர். பொறுமை மிக்க ஆழ்வார் அவர்களின் பிழையைப் பொறுத்தருளி அதற்குக் கழுவாயாக அவருக்குப் பணிவிடை செய்து வாழுமாறு கட்டளையிடு கின்றார். அவர்களும் அடியவர்க்கு அடியராய் குறிப்பறித்து குற்றேவல் புரிந்து பேறுபெற்று வாழ்கின்றனர். திருவரங்கவாசம் : மெய்யில் வாழ்க்கையை மெய் எனக்கொள்ளும் இவ்வையம் தன்னொடும் கூடுவதில்ல்ை யான் (3:1) என்று கருதிய ஆழ்வார் பொய்ம்மைக்கு இட மான ஆட்சியிலிருப்பதற்கு விருப்பப்படாமல் ஆட்சிப் பொறுப்பை தமது திருக்குமாரன் திடவிரதனுக்கு முடிசூட்டி வைக்கின்றார். அரங்க நகர் சென்று நம்பெருமாளைச் சேவித்து அவ்வழகிய மணவாளனையே தனக்கு உரிய மன வாளனாகக் கருதிய தம் திருமகளை அவருக்கு உரிய பொருளாக மணம் செய்வித்து பகவத் பாகவத கைங்கரியன் களை விதிமுறை வழுவாது நாடோறும் செய்துகொண்டு அத்திருத்தலத்தில் சிலகாலம் இருந்து வருகின்றார். திருத்தலப் பயணம் : திருவரங்கத்திலிருந்துகொண்டு திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளுகின்றார். திருவேங் கடம், திருவயோத்தி, தில்லைத் திருச்சித்திரகூடம், திருக் கண்ணபுரம், திருமாலிருஞ்சோலைமலை, திருவித்துவக் கோடு முதலான திருத்தலங்கட்குச் சென்று ஆங்காங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களைக் கண்ணாரக் கண்டு சேவிக்கின்றார். நம்மாழ்வார் திருவவதரித்த திருக்குருகூர் அருகிலுள்ள பிரமதேசம் என்னும் ஊரை அடைந்து அங்குள்ள இராஜ கோபால் சுவாமி சந்நிதியில் சிலகாலம் திருத்தொண்டு செய்கின்றார். பின்னர் திருவரங்கம் திரும்பி அங்கு