பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 263 இத்தகைய எம்பெருமான் பாம்புப் படுக்கையில் காயாம் பூவண்ணன் நீலமணி போன்ற திருமேனியுடன் அறிதுயில் கொள்ளுகின்றான். காவிரியின் அலைகள் அவன் திருவடி களை வருடுகின்றன. வீணை என்னும் இசைக் கருவியால் இன் பந்தரவல்ல தும்புரு, நாரதர் ஆகிய மாமுனிவர்கள் அவனை ஏத்துகின்றனர். நான்முகன் வணங்கி ஒப்பு இல்லாததும் அநாதியுமான வேத சாத்திர தோத்திரங் களால் இடைவிடாமல் துதிக்கின்றான். நான்முகன், சிவன், இந்திரன், இவர்களுடன் தேவர்களும் அரம்பை முதலிய தேவமாதரும், சனகாதி மாமுனிவர் குழாமும் ஒருவருக்கொருவர் நெருக்கித் தள்ளிக்கொண்டும் திசை களெங்கும் மலர்களை இறைத்துக்கொண்டும் வந்து திரளு கின்றனர். அம்புகளுடன் கூடிய சார்ங்கம் என்னும் வில்லும், அழகாக வளைந்துள்ள பாஞ்சசந்யம் என்னும் திருச்சங்கும், கொலை செய்யவல்ல சுதர்சனம் என்னும் திருவாழியும், கொடுந்தொழில் புரியும் கெளமோதகி என்னும் திருநாமமுடைய கதையும் வெற்றியால் ஒளி மிகுந்த நந்தகம் என்னும் வாளும், மிக்கு விரைந்த கதியை யுடைய பெரிய திருவடி என்னும் கருடனும் - இவை யாவும் அரங்கனை நாற்புறமும் சூழ்ந்துகொண்டு காவல் புரிகின்றன. கொடுமையால் விளங்காநின்றுள்ள மனத்தை ஒழித்து, வஞ்சனைகளைப் போக்கிக் கொடிய இந்திரியங் களைப் பட்டிமேயாதபடி தடுத்து, மேன்மேலும் துக்கத்தை விளைவிக்கும் பெருஞ்சுமையாயுள்ள பழவினைகளை (சஞ்சித கர்மங்களை) வேரறுத்து, இருமுப்போதும் (பஞ்ச காலங்களிலும்) துதித்து, எல்லையில்லாத் தொன்னெறிக் கண் நிலை நின்ற அறந்திகழும் மனத்தவர்கட்கு அடைபத் தக்க பொருளாய் இருப்பவன் அரங்கன். இத்தகைய பெருமானை என் கண்ணிணைகள் கழிக்கும் நாள் என்று கொலோ: (1) வாயார வாழ்த் துவது என்று கொலோ? (2).