பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

ஆழ்வார்களின் ஆரா அமுது


அம்மான்தன் அடியிணைக்கீழ் அலர்க ளிட்டு அங்கு அடியவரோ டென்றுகொலோ அணுகு நாளே? (3) கோவின் நாவுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம் மலர்துய் என்றுகொலோ கூப்பும் காளே (4) *அரங்கத்து உரகம் ஏறிக் கண்வளரும் கடல் வண்னர் கமலக் கண்ணும், ஒருமதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே?" (6) என் மலர்ச் சென் னி என்று கொலோ வணங்குநாளே? (5), கிறந்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே! (7) மாலோனைக் கண்டின்பக் கலவி எய்தி வல்வினையேன் என்று கொலோ வாழும் காளே? (8) போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூத்லத்தில் என்று கொலோ புரளும் நாளே? :9) அடியார்தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே? (10) என்று பத்துப் பாசுரங்களிலும் அரங்கனைச் சேவிக்கத் துடிக்கின்றார்; பாரிக்கின்றார். எப்படிச் சேவிக்க வேண்டும் என்று கருதுகின்றார்? பெரிய பெருமாளைச் சேவித்த மாத்திரத்தில் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் (பெரி. திருவந். 34) என்றவாறு சைதில்யம் பிறந்து தரித்து நிற்க முடியாத நிலை ஏற்படும். இதற்கு என் செய்வது? அழகியமணவாள னுடைய கண் நோக்கில் நிலவுகின்ற இரண்டு திருமணத் துரண்களை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு தரித்து 17. திருமணத்துரண் என்பது சம்பிரதாயத் திருநாமம் இவை அழகிய மணவாளனின் கருவறையருகில் இருக்கும் இரண்டு தூண்கள். அழகிய மணவாளனது திருமேனியின் பரிமளம் இரண்டு தூண்களாகப் பரிணமித்து நிற்பதால் இப்பெயர் பெற்றது.