பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


266 ஆழ்வார்களின் ஆரா அமுது: இவனையும் விலட்சணன்' ஆக்கி விடும்படி ஆயிற்று. இவற்றையெல்லம் நன்கு உணர்ந்தவர் குலசேகராழ்வார். எம்பெருமானைக் காண்பதே கண் படைத்ததற்குப் பயன் என்ற சித்தாந்தம் சாமான்யமானதென்றும் பாகவதர் களுடைய குழுவைச் சேவித்தாலன்றிக் கண்களுக்கு மோசனம் இல்லை என்பதே சிறப்பான சித்தாந்தம் என்றும் கண்டறிந்தவர்களுள் இந்த ஆழ்வார் தலைவர் என்னும் இடம் முதல் பாசுரத்தில் தெளிவாகின்றது. அடியவர்கட்குப் பரமபோக்கியனான பரமபத நாதனை வாயாரத் துதித்து அவனிடத்தில் மிக்க மோகங்கொண்டு அதனால் உடம்பு நின்றவிடத்தில் நில்லாது கூத்தாடி *இலக்குமி நாயகனே! சீமந்நாராயணனே! என்று இப்படிப் பல திருநாமங்களைக் கூறியழைத்து, அவ்வளவில் எம் பெருமான் கண்ணெதிரே வந்து சேவை தந்தருளக் காணா மையாலே வருந்தி ஏங்குகின்ற பாகவதர்களின் குழுவைச் சேவிக்கப் பெறுவதே கண்களுக்குப் பயன் என்கின்றார் (1): * பெண்டிரால் க்கங்களுப்ப்பான் பெரியதோர் இடும்பைபூண்டு, உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து' என்றவாறு அல்லும் பகலும் அன்றாட வாழ்வுபற்றிய உலகோர் சிந்தனைகளே இன்றி எம் பெருமானுடைய திவ்விய சரிதங்களையே மாறி மாறி அநுசந்தித்து, அந்த அநுசந்தானத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல் பகவானுடைய நாமங்களையே வாய் விட்டுக் கதறுகின்ற பூரீவைணவர்களின் திருவடித் தூள் களிலே நாம் ஆடப் பெற்றால் கங்கை நீரில் குடைந்தாடும் ஆசை எதற்கு? என்று பேசுகின்றார் (2).

  • ஏறு அடர்த்ததும் ஏனம் ஆய்நிலம் கீண்டதும், சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்து அரக்கப் பூண்டுகளின் கிழங்கெடுத்ததும், மண் அளந்ததுமான வரலாறுகளை

20. இவனையும்-இந்தப் பிராமணனையும்; விலட். சனை-பாகவதன். - 21. திருமாலை,5.