பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxviii அவர்கள் அருளிய தமிழ் அமுதினைச் சுவைத்து இன் புறலாம். இந்நூலாசிரியரின் அகத்தோற்றத்து வைணவப் பொலிவைக் கண்டு வியந்து போற்றி மகிழலாம். இவருக்கு வேங்கடத்தெம்மானின் திருவருள் வெள்ளம் கோத்து நிற்பதால், இப்பேராசிரியப் பெருந்தகை இது போன்ற பயனுடைய நூல்கள் பலவற்றை உருவாக்கி விரைவில் 78 என்ற எண்ணை 100க்கு (நூல் 78 ஐ 100 ஆக்குதல்) உயர்த்திவிடுவார் எனப் பெரிதும் நம்புகின்றேன். 100 நூல்களின் ஆசிரியராக இப்பேரறிஞர் விளங்கும் காலம் மிக அண்மையதாக அமையவேண்டி வேங்கட விளக்கினை வழுத்தி வழிபடுகின்றேன். ஆரா அமுதாக இனிக்கும் இவ்வரிய நூலுக்கு அணிந்துரை வழங்கும் வாய்ப்பைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகின்றேன். இதுவும் அவனிட்ட வழக்காகவே கொள்ளுகின்றேன். o *திருவரங்கம்" ,ே எல்லப்பச்செட்டியார் யிருப்பு 雞 இராசபுரம்.637 AIR 色马 மு. இராமசாமி சூலை, 5, 1987