பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


268 ஆழ்வார்களின் ஆரா அமுது அடுத்துப் பேசுவது: இவ்வுலகைப் படைப்பதற்குக் காரணமாக இருப்பவனும், பிரளயகாலத்திலும் வாழ்ப வனும், சர்வவியாபியாயும் ஆச்சரியபூதனுமாயும் இருப்ப வனுமாகிய விண்னோர் பெருமான் அரங்கநாதன். இவனுக்கே பக்தி செய்து கொண்டிருக்கும் பாகவதர்களுக்கே நான் பிற விதோறும் அன்பு பூண்டிருப்பேன்" (6) - என்கின்றார். அடுத்து அரங்கநாதனது திருமேனியழகில் ஈடுபட்ட வைணவர்களை நினைக்கின்றார். காளமேகங்கள் பல. திரண்டாற்போன்று விளங்குகின்றது அரங்கன் திருமேனி. அதில் விலட்சண்யமான லாவண்யம் திகழ்கின்றது. அவனுடைய சிவந்த திருப்பவளத்தில் முத்தன்ன வெண்ணகை பளிச்சிடுகின்றது. முத்துமாலை அவனுடைய திருமார்பில் திகழ்கின்றது. --இத்தகைய தேசுடையவனைக் கிட்டி அநுபவிக்க வேண்டும் என்று சிந்தையுடையவர்கள் துரீவைணவர்கள். இவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணிர் வெள்ளமிட்டோட அ ர ங் க ைன அநுபவிக்கின்றனர், இவர்கள் இரண்டு திருவடிகட்கே என் மனம் கசிந்து அன்புடையதாகின்றது (7) - என்று பேரானந்தப் படு கின்றார். அடுத்துப் பேசும் பாசுரம் அற்புதமான அழகுடையது: மாலையுற்ற கடல் கிடந்தவன் வண்டுகிண்டு கறுக் துழாய் மாலையுற்ற வரைப்பெறுந்திரு மார்வனைமலர்க் கண்ணனை மாலையுற்றெழுக் தாடிப்பாடித் திரிந்தரங்கனெம் மானுக்கே மாலையுற்றிடும் தொண்டவாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே. (8) என்பது பாசுரம். இதில் மாலை" என்ற சொல் திரும்பத் திரும்ப வந்து படிப்பவரின் உணர்ச்சி கிளர்ந்தெழச் செய்கின்றது. மாலை உற்ற கடல் என்பதில் மாலை"