பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 ஆழ்வார்களின் ஆரா அமுது சேர்வதில்லை. அரங்கநகர் அப்பா!' என்று எம்பெருமான் திருந1 மங்களைச் சொல்லி அழையா நிற்கின்றேன். என்னிடத்தில் வாத்சல்யமுடைய எம்பெருமான் பக்கவியே மையல் கொண்டு நிற்கின்றேன். (1) என்கின்றார்.

பெண்டிர்கள் பக்கல் பித்தேறி நிற்கும் மனிதர் களுடன் நான் உறவு கொள்வதில்லை எம்பெருமானிடம் யான் கொண்டுள்ள காதலுக்குப் போக்கு வீடாகப் பெரிய பெருமாளே!" என்று கூப்பிட்டு என் மீது வியாமோகமுள்ள எம்பெருமான் திறத்திலேயே மால்கொண்டு நிற்கின்றேன்" (2) என்று பேசுகின்றார்.

6 மாரன் கனைக்கு இலக்கு ஆகித் திரிகின்ற இப்புவி யிலுள்ள மாந்தருடன் யான் உறவு கொள்வதில்லை. முத்துமாலையைத் திருமார்பில் தரித்தவனும், அடியார்கள் தரகத்தில் புகாமல் காத்தருள்பவனுமான அரங்கனுக்கு யான் பித்தன்' (3) என்று கூறுகின்றார். உண்டியே உடையே உகந்து ஓடும்.இம் மண்டலத் தோடும் கூடுவது இல்லையான்; அண்ட வாணன் அரங்கன் வன்பேய்முலை உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே (4) என்பது அடுத்த பாசுரம். அடுத்துப் பேசும் பாசுரங்களில், எத்தி றத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்; அத்தனே! அரங்கா என்றழைக் கின்றேன்; பித்த னாய்ஒழிக் தேன் எம்பி ரானுக்கே (7) பேயரே எனக்கு யாவரும்: யானும் ஓர் பேவனே எவர்க்கும்; இதுபேசி என் ஆயனே! அரங்கா!' என்று அழைக் கின்றேன்; பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (8) என்பவை உள்ளத்தைத் தொடுபவை திருவேங்கடம்: இன்று இரவும் பகலும் ஓயாது பக்தர் கட்குப் பேட்டி தந்து கொண்டிருக்கும் ஏழுமலை அப்பன்