பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 27; நித்தியவாசம் செய்யும் திருவேங்கடம்’ என்னும் திவ்விய தேசத்தின் மீது தனக்குள்ள ஆதராதிசயத்தை வேளியிடும் பாங்கில் தனக்குத் திருமலை சம்பந்தமுடைய பிறப்பே வேண்டும் என்கின்றார்.

  • ஏழு காளைகளை வென்ற எம்பெருமானுக்கு ஒழிகில் காலமெல்லாம் கைங்கரியம் செய்வதையே ந - ன் விரும்புவேனேயன்றி நாளுக்கு நாள் மோடுபருக்கும் மனித உடம்பெடுத்துப் பிறத்தலை நான் விரும்பவில்லை. திருமலையின் திருக் கோயிலுக்கு அருகிலுள்ள கோனே து: என்ற திருத்தலத்தில் வாழும் கொக்காகப் பிறத்தலே எனக்குப் போதும்' என்கின்றார். திருவேங்கடத்திலுள்ள சுவாமி புஷ்கரிணியில் குருகாய்ப் பிறப்பது விரஜா நதியைச் சேர்ந்து வைகுந்தத்தில் பிறப்பதொக்கும் என்று கருதின தாகத் தெரிகின்றது (1).
  • அரம்பையர்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கும் வாணாளும் செல்வமும் எனக்கு வேண்டா; பிற விக்கு வித்திடும் மண்ணரசும் எனக்கு வேண்டா, சோலைகள் சூழ்ந்துள்ள திருவேங்கட மாமலையின் சுனைகளில் ஒரு மீனாகப் பிறக்கும்பேறு எனக்குப் போதுமானது" என் கின்றார். முன் பாசுரத்தில் குருகாய்ப் பிறப்பேனே என்றவர் அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத்திருமலை யைத் துறந்து வேற்றிடத்திற்குச் செல்லக்கூடும் என்து கருதி, அங்ங்னமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு, வாழ்க்கை, இறப்புகளையுடைய மீனாய்ப் பிறப்பதை வேண்டுகின்றார் (2).
  • சடாமகுடத்தைத் தாங்கிய சிவபெருமானும் நான் முகனும், தேவேந்திரனும் அடியார்கள் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு உள்ளே புகுவதற்கு சாத்தியமில்லாமல் இருக்கும் பூலோக வைகுந்தமாகிய திருமலையில் மின் விட்டச் சுடராழி'யையுடைய திருவேங்கடமுடையான் வாய் நீர் உமிழ்கின்ற தங்கவட்டிலைக் கையிலேந்திக் கொண்டு