பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2% ஆழ்வார்களின் ஆரா அமுது என்று தலைக் கட்டுகின்றார். இந்தத் திருவேங்கடமாமலை பற்றிய திருமொழியை அடியொற்றி முத்தகக் கவி வீர ராகவ முதலியார் என்பார், மாடாக நிழற்றுசெழு மரணாகத் தவச்சிறிய பூடாகக் குழைத்தகறும் புதலாக வழிபடுமோர் ஓடாகப் பெறுவமெனில் உயிர்காள் கற்கதிபெறலாம் வீடாகத் திருநெடுமால் வீற்றிருக்கும் வேங்கடத்தே: என்று தம் திருவேங்கடக் கலம்பகத்தில் போற்றி மகிழ்வர் திருவித்துவக்கோடு : கேரள மாநிலத்திலுள்ள இத திருப்பதியை 1959 மே மாதம் குடும்பத்துடன் சேவித்தது நினைவில் எழுகின்றது. சீமன் நாராயணனையன்றி. தமக்கு வேறு சரணமில்லாமையை இத்திருமொழியில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலமாகத் திருவித்துவக் கோட்டம்மான் சந்நிதியில் விண்ணப்பம் செய்கின்றார். ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வற்புறுத்துகின்றார். தருதுயரம் தடாயேல்உன் சரண் அல்லால் சரண் இல்லை விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே (1) தடாயேல் - கிளையாவிடில்; விரை - மனம்; என்று திருவித்துவக்கோட்டுப் பெருமானை விளிக்கின்றார். எம்பெருமானைத் தாயாகப் பாவித்து தாம் குழந்தை நிலைக்கு வந்து விடுகின்றார். 28. திருவேங். கலம். 72 29. மலை நாட்டில் இது திருமிற்றக்கோடு என வழங்கி வருகின்றது. ஷோரனுார் இருப்பூர்தி நிலையத்திலி. ருந்து 10 கல் தொலைவு. பேருந்து வழி,