பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத் தூர்உறை வான்தன் பொன்னடி க்ாண்ப தோர்.ஆச்ை யினால்என் பொருகயற் கண் இணை துஞ்சா இன்னடி சிலொடு பால் அமுது ஊட்டி எடுத்தளன் கோலக் கிளியை உன்னொடு தோழமைக் கொள்ளுவன், குயிலே! உலகு அளந் தான் வரக் கூவாய்' -ஆண்டாள் பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றியும் அவர்களின் அருளிச் செயல்கள் பற்றியும் எளிய நடையில் நூல்கள் எழுதிப் பொதுமக்கட்குப் பக்தி விருந்தளிக்கவேண்டும் என்ற என் பேரவா நிறைவேறும் பாங்கில் ஆழ்வார்களின் ஆரா அமுது என்ற தலைப்பில் எட்டு ஆழ்வார்கள் பற்றியும், அவர்களுடைய அருளிச் செயல்களை விளக்கும் பாங்கிலும் இஃது இரண்டாவது நூலாக வெளிவருகின்றது. நான் திருப்பதியில் பணியாற்றியபொழுது திருவேங்கடவன் பல்கலைக்கழக விரிவுச் சொற்பொழிவுத் திட்டத்தின் கீழ் பாக்காலாத் தமிழ்ச் சங்கம், ஏகாம்பரக் குப்பம் கழக உயர் நிலைப்பள்ளி, நகரி கழக உயர் நிலைப்பள்ளி, குண்டக்கல் தமிழ்ச் சங்கம், கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் ஆகிய இடங்களில் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகளே இந்த நூலாக வடிவம் பெறுகினறன. நூலின் பொருள் தெவிட்டாத ஆரா அமுதாக இருப்பதால் நூலுக்கு அதை வழங்கிய ஆழ்வார்களின் திருநாமத்தோடொட்டிய பெயர் சூட்டப் பெற்றுள்ளது. 4. நாச். திரு. 5:5