பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

ஆழ்வார்களின் ஆரா அமுது


பட்டவள்; விழுமம் - துன்பம்; களைஞர் நீக்கு வார்; இலன் பெற்றிலள்; அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள்மாட்டே செல்லும் குழவி போல, நீ அருளின்றிப் பிரியினும் நின்மாட்டே நின்று நின்தண்ணளியால் வாழும் நிலையினள் என்று தோழி கூறும் கருத்தினையே ஆழ்வாரும் தன்னைக் குழந்தை நிலையிலும் இறைவனைத் தாய் நிலையிலும் வைத்துப் பேசுகின்றார். குழந்தையைக் காட்டிய குறுந்தொகைப் பாடலைப் படித்துவிட்டு ஆழ்வார் பாசுரத்தை நோக்கினால் பொருள் மேலும் தெளிவுறு கின்றது. தாய் உடன்று அலைக்குங் காலையும் வாய்: விட்டு அன்னாய்" என்று அலைக்கும் குழவிபோல' என்ற சிங்கப் பாடலின் உவமை ஆழ்வாரின் இறைமைப்பாடலில் புதுமுறையில் அமைந்து புத்தொளி வீசி நின்று நயமுறு கின்றது. பாட்டின்பம் பக்தி உணர்வாக மாறி நம்மை மேலும் நெகிழ்விக்கின்றது. கணவன் ஒருவன் தான் தீ முன் வலம்வந்து கைபிடித்துத், துணைவியாகக் கொண்ட குலமகளைக் கண்டவர்கள் இகழும் வண்ணம் மிகக் கேவலமாக நடத்துகின்றான். எனினும், அக் குலமகள் கணவனையன்றி வேறு ஒருவரையும் புகலிடமாக நினைப்பதில்லை. இந்த உணர்ச்சியுடன், கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல விண்தோய் மதில்புடைசூழ் வித்துவக்கோட் டம்மா! நீ கொண்டாளே யாகிலும் உன்குரைகழலே கூறுவனே (2). காதலன்.கணவன்; குரைகழல்-ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய திருவடிகள்)