பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 279 என்று பாடுகின்றார். உலகில் எத்தனையோ அல்லல்கள் பட்டாலும் அவற்றைத் தீர்ப்பதற்கு உன்னையன்றி வேறு யாருளர்?’ என்று அவன் திருவடிகளையே சரணமாகக் கொள்ளுகின்றார் ஆழ்வார். கணவன் நிலையில் எம் பெருமானையும் மனைவி நிலையில் தம்மையும் வைத்துப் பேசுகின்றார். இங்குப் பரமான்மாவின் தலைமை, சீவான் மாவின் அடிமை, சீவான்மா பரமான்மாவின் கூட்டுறவால் இன்பத்தை அடைதல், பிரிவினால் துன்புறல், சீவான்மா பரமான்வைக் கரணங்கள் எல்லாவற்றாலும் அநுபவித்துக் களிப்புறுதல் - போன்ற எண்ண அலைகள் விரைவாக ஆழ்வாருள்ளத்தில் குமிழியிட்டிருக்கவேண்டும். ஆழ்வாரின் உணர்ச்சி அடுத்த பாசுரத்தில் தலை காட்டுகின்றது; குடிகளைக் காப்பதற்கென்று மானை யணிந்துள்ள மன்னன் ஒருவன் குடிமக்களிடம் அருள் நோக்கம் செய்யாது, அவர்கட்கு எப்படிப்பட்ட துன்பங் ఛ్ : ఫ్రi? விளைவித்தாலும் குடிமக்கள் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்தக் குடி களின் நிலையில் ஆழ்வார் தம்மை வைத்துப் பேசுகின்றார். தான்கோக்காது எத்துவரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே (3) (தார்.மாலை; கோல்.செங்கோல்) என்ற பாசுரத்தின்மூலம் நீ அருள் நோக்கம் செய்யா விடினும் உன்னையன்றி வேறொருவரைச் சரண் அடை யேன்” என்று மனம் கரைகின்றோம். எம்பெருமானை அரசன் நிலையிலும் தம்மைக் குடிகள் நிலையிலும் வைத்து எண்ணி இரட்சய - இரட்சக பாவனையில் திளைக்கின் நார் ஆழ்வார். இதில், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி ?? 32. குறள் - 542