பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 28i ஆழ்வார் காட்டும் அடுத்த எடுத்துக்காட்டு கடலருகில் உள்ள கேரள நாட்டிற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. மாக்கடலில் ஒரு கப்பல் புறப்படுகின்றது. அக்கப்பலின் பாய்மரத்தின் மீது ஒரு பறவை உள்ளது. கப்பல் நடுக் கடலுக்குச் சென்றவுடன் பறவை பறக்கத் தொடங்கு கின்றது. நிலத்தினின்றும் கப்பல் மிகச் சேய்மையில் வந்து விட்டதால் பறவையால் மீண்டும் நிலத்திற்குச் செல்ல முடியவில்லை. கடலிலோ பறவை சென்று தங்குவதற்கு ஏற்ற இடமும் இல்லை. ஆகவே, பறவை மீண்டும் கப்பலின் பாய்மரத்திற்கே வந்து சேர்கின்றது. வாழ்க்கைக்கடலில் உள்ள நாமும் இறைவனாகிய கப்பலின் பாப் மரத்திலுள்ள பறவையின் நிலையில்தானே உள்ளோம்? எப்படி எப்படிப் பறந்தாலும் இறுதியில் இறைவனைத் தானே வந்தடைதல் வேண்டும்? எங்குப்போய் உய்கேன் உன் இணையடியே அடையல்அல்லால் எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே. (5) (எறி.(அலை) எறியும்; வங்கம்-மரக்கலம்; கூம்பு-பாய் மரம்) என்ற பாசுரத்தைப் பக்தியுடன் பாடி அதுபவிக்கவேண்டும். மரக்கலத்தின் நிலையில் எம்பெருமானும் பறவையின் நிலையில் தாமும் இருப்பதை ஆழ்வார் குறிப்பிடுகின்றார். சீவான்மா பரமான்மாவைவிட்டு விலகிப் போக முடியாத நிலையையும் பின்னது முன்னதற்கு ஆதாரமாயிருக்கும் நிலையையும் உணர்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டு நாம் அறிந்ததேயா னாலும், ஆழ்வார் அதைச் சற்று விநோதமாகக் கையாளு