பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

ஆழ்வார்களின் ஆரா அமுது


கின்றார். கதிரவனைக் கண்டு தாமரை மொட்டுகள் மலர் கின்றன என்பதை நாம் அறிவோம். செந்நிறமுடைய நெருப்பு தாமரை மொட்டுகளின் அருகில் வந்து வெப்பத். தைத் தந்தாலும் அந்த வெப்பத்தினால் தாமரை மலர்வ தில்லை. நெருப்பின் வெப்பம் தாமரைக்கு ஒத்துவருவ தில்லை. கதிரவனின் வெப்பமின்றிப் பிறிதொன்று அது மலர்வதற்குக் காரணமாகாது. அங்ஙனமே, தாம் அதுப. வித்தே தீரவேண்டிய கொடிய பாவங்களை இறைவன் தீர்த்தருளாதொழியினும் அவனுடைய எல்லையில்லாத, உத்தம குணங்களுக்கேயன்றி வேறொன்றுக்கும் நாம் நெஞ்சுருக முடியாத நிலையைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இந்த உணர்வுடன் நாம், செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரம்சேர் வெங்கதிரோற்(கு) அல்லால் அலராவால் வெந்துயர்வீட் டாவிடினும் வித்துவக்கோட் டம்மா! உன் அந்தமில்சீர்க்கு அல்லால் - அகங்குழைய மாட்டேனே. (6) fஅழல்.நெருப்பு; கமலம்.தாமரை, அந்தரம்-வானம்; துயர்.பாவம்; வீட்டாவிடினும் - தீர்த்தருளா தொழியினும்; அந்தம் இல்சேர்-எல்லையில்லாத உத்தம குணங்கள்; அகம்-நெஞ்சம்; குழைதல்உருகுதல், ! என்ற பாசுரம் நெஞ்சு நெக்குருகப் பாடிப் பரவசப்பட வேண்டிய பாசுரம், கதிரவன் நிலையில் எம்பெருமானையும். தாமரையின் நிலையில் தம்மையும் வைத்துக் கூறியதன் கருத்தினைச் சிந்திக்க வேண்டும். பரமான்மா இன்பந் தருபவன் என்பதையும், சீவான்மா இன்பம் துய்ப்பவன் என்பதையும் அறிகின்றோம். இதில் தாயக-காயகி, பாவனை தொனிப்பதைக் கண்டு மகிழ்கின்றோம்.