பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


284 ஆழ்வார்களின் ஆரா அமுது கல்யாண குணங்கள் தவிர மற்றொன்றை தம் மணம் அநுமதியாத நிலையை வேண்டி நிற்கின்றார் ஆழ்வார். இந்த உணர்வுடன் பாடுகின்றார் ஆழ்வார்: தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடித் தொடுகடலே புக்கன்றிப் புலம் நிற்க மாட்டாத மற்றவைபோல் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (8). தொக்கு-திரண்டு; தொடுகடல்-ஆழ்கடல்; சீர் கல்யாண குணங்கள்.: என்று பாடுகின்றார் ஆழ்வார். இதனால் பரமான்மாவின் பெருமையும் சீவான்மாவின் சிறுமையும், இறுதியில் சீவான்மா பரமான்மாவை அடைதலும் புலனாவதை அறியமுடிகின்றது. அன்பர்களே, இப்போது கூறப்போகும் பாசுரம் என்றும் நினைவிலிருத்த வேண்டியதொன்று. இகத்தில் நாட்டம் செலுத்துபவர்கள் அன்ைவரும் இதனை நடை முறைப் படுத்த வேண்டும். எம்பெருமானிடத்தில் அன்பைச் செலுத்தினால் அதனால் செல்வத்தை வெறுக்கின்றவர் களிடம் அவர்களின் நல்வினைப் பயனால் அச்செல்வம் அவர்களை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. இதனை நாம் அறிந்தாலும் இஃது இறைவனது திருவுள்ளப்படி அமைகின்றது என்பதை நாம் உணராமல் இல்லை. ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமை என்பதை நாம் அறிவோம். இது வைணவ சித்தாந்தம். இந்த உடைமையை இறைவன் வெறுத்தொதுக்கினாலும் ஆன்மாக்கள் இறைவனையே பற்றி நிற்கும். இந்த உணர்வை எழுப்பும் நிலையில் ஆழ்வார் பாசுரம் அமைகின்றது.