பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹X溪 ஒவ்வொரு சொற்பொழிவிலும் தெரிந்த அளவு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக உரைத்து அவர்தம் அருளிச் செயல்களைப் பல கோணங் களில் எடுத்துக்காட்டியுள்ளேன். வைணவப் பெருமக்க ளுக்கு இந்நூல் நல்லதொரு விருத்தாக இருக்கும் என்று கருதுகின்றேன். பொதுமக்களும் இந்த ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் ஆழங்கால்பட்டு அநுபவிப்பதற்கு இப்பனுவல் ஒரு துண்டுகோலாக-ஏன்? ஊன்றுகோலா வுேம்-அம்ையும் என்று நம்புகின்றேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறினால் என்னுடைய இந்த முயற்சி பயனுள்ளதாயிற்று என்று மகிழ்வேன். தம்மையும் தமது அருளிச் செயல்களையும் அறிமுகப்படுத்திய என்னை ஆழ்வார்களும் வாழ்த்தி ஆசி கூறுவார்கள் என்றும் உறுதி கொள்ளுகின்றேன். திருப்பதித் தமிழ்ப் பணியிலிருந்து ஒய்வு பெற்று 1978 சனவரி 14 ஆம் நாள் சென்னையில் குடியேறியதிலிருந்து தேனாய், கன்னலாய், அமுதாய்'த் தித்திக்கும் ஆழ்வார் களின் பாசுரங்களை வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது (நான். திருவந். 63) என்றவாறு என் காலம் கழிகின்றது. சொற் பொழிவுகள் நடைபெற்ற போதும், என் ஆராய்ச்சியின் போதும் நான் ஆழங்கால்பட்ட பாசுரங்களை மீட்டும் மனத்தில் இருத்தி அசை போடுவதற்குப் பெற்ற வாய்ப்பின் காரணமாக இந்நூல் பிறக்கின்றது. சொற்பொழிவுக்காக நான் தயாரித்து வைத்திருந்த குறிப்புகனை விரித்து எழுதும்போதும் பாசுரங்களில் ஆழங்கால்பட்டு அநுபவித் தேன். என் அதுபவம் இப்பனுவலைப் படிப்போரிடமும் எழுவதற்குக் காரணமாக இருக்குமானால் அதனை யான் பெற்ற பெரும் பேறாகவே கருதுவேன், தமிழகத்தில் ஏறக்குறைய 20 ஆண்டுகளும் ஆந்தி ரத்தில் ஏறக்குறைய 20 ஆண்டுகளும் பணியாற்றி ஒய்வு ஊதியம் கூடப் பெறாது தவிக்கும் அடியேனுக்கு ஏழுமலையான் ஒரளவு நிதி வழங்கி (நூலின் முட்டு வழியில் 50 விழுக்காடு) உதவி புரிந்திராவிடில் இந்நூல் அச்சு வாகனம் ஏறிக் கற்போர் கரங்களில் கவினுறத் தவழ்வ தற்கு வாய்ப்பே இருந்திராது. செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல் என்ற பேருண்மையை அறிந்து செல்வச் சீமானாகத் திகழும் ஏழுமலையான் அகலகில்லேன் இறையும்’ என்று அவன் திருமார் பைவிட்டு அகலாதிருக்கும்